/* */

கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை

கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு கரம் கொடுத்து ஊக்கத்தொகை வழங்கி பாராட்டிய நம்மால் முடியும் நண்பர்கள் குழு.

HIGHLIGHTS

கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு  ஊக்கத்தொகை
X

கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு கரம் கொடுத்து ஊக்கத்தொகை வழங்கி பாராட்டிய நம்மால் முடியும் நண்பர்கள் குழு.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம், நாட்டார் மங்கலம் கிராமத்தில் உள்ள நம்மால் முடியும் நண்பர்கள் குழு மரம் நடுதல், ஆதரவற்றவர்களுக்கு உதவுவதல் உள்ளிட்ட பல்வேறு நலப்பணிகளை செய்து வருகின்றனர். இதனிடையே செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2020-2021 கல்வி ஆண்டில் 12ம் வகுப்பு தேர்வில் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் முறையே வான்மதி, ரஞ்சனி, கிருபாகரன் ஆகிய மாணவர்களுக்கு நம்மால் முடியும் நண்பர்கள் குழுவினர் ஊக்கத் தொகை வழங்கி கெளரப்படுத்தினர்.

பள்ளியில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் நாகமணி மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத் தொகையான ரூ 2,000, ரூ 1500 மற்றும் ரூ 1000 தொகையினை பாராட்டினார். இந்த நிகழ்வில் உதவி தலைமையாசிரியர் ராதாகிருஷ்ணன்,சக ஆசிரியர்கள், செட்டிகுளம் ஊராட்சி மன்றத் தலைவர் கலாதங்கராசு, நம்மால் முடியும் நண்பர்கள் குழுவை சேர்ந்த விஜய்அரவிந்த், விக்னேஷ், விஷ்ணுகோபால், நவீன், அபிநாத், கமலேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 28 July 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட தனியார் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?