/* */

அவ்வையார் விருதுக்கு விண்ணப்பம் அளிக்க மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

அவ்வையார் விருதுக்கு விண்ணப்பம் அளிக்க பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

அவ்வையார் விருதுக்கு விண்ணப்பம் அளிக்க  மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்
X

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் வழங்கப்படும் 2021-2022-ம் ஆண்டுக்கான அவ்வையார் விருது வழங்கும் பொருட்டு தகுதியானவர்கள் கருத்துருக்கள் அனுப்பி வைக்கலாம்.

இவ்விருது பெற கருத்துரு அனுப்பும் நபர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். சமூக நலனை சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.

இவ்விருதிற்கான கருத்துருக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், பெரம்பலூர்- 621 212 என்ற முகவரிக்கு 24.12.2021 அன்று மாலை 5.30 மணி வரை அனுப்பி வைக்கலாம். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தை 8838872443 மற்றும் 7502034646 என்ற கைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 21 Dec 2021 2:27 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு