/* */

நாமக்கல்லில் வருகிற 14-ம் தேதி விரால் மீன் வளர்ப்பு பயிற்சி

நாமக்கல்லில் வருகிற 14-ம் தேதி விரால் மீன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் வருகிற 14-ம் தேதி விரால் மீன் வளர்ப்பு பயிற்சி
X

நாமக்கல்லில் வரும், 14-ம் தேதி, விரால் மீன் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் டாக்டர் அழகுதுரை தெரிவித்துள்ளதாவது:-

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 14-ம் தேதி காலை 10 மணிக்கு, விரால் மீன் வளர்ப்பு என்ற தலைப்பில், ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இப்பயிற்சியில், மீன் பண்ணைக் குட்டை அமைக்க இடம் தேர்வு, மண் மற்றும் நீர் பரிசோதனை, பண்ணைக் குட்டை அமைத்தல், விரால் மீன் குஞ்சு உற்பத்தி முறை, வளர்ப்புக் கேற்ற மீன் குஞ்சு தேர்வு செய்தல், உணவு மற்றும் நோய் மேலாண் முறைகள் மேலும் மாநில, மத்திய அரசின் மீன் வளர்ப்பு மானியம் குறித்து விளக்கப்படுகிறது.

பயிற்சியில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள், வேளாண் அறிவியல் நிலையத்தை நேரிலோ அல்லது 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு, தங்களது பெயரை முன்பதிவு செய்து பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

Updated On: 11 Sep 2022 2:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு