/* */

நாமக்கல்லில் குடிநீர் குழாய் அமைக்க தோண்டிய பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

நாமக்கல்லில் குடிநீர் குழாய் அமைக்க தோண்டிய பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் மருத்துவமனையில் அனுமதி.

HIGHLIGHTS

நாமக்கல்லில் குடிநீர் குழாய் அமைக்க தோண்டிய பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து
X

நாமக்கல் சின்னமுதலைப்பட்டி பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில்  கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி.

கோழிப்பண்ணைகளுக்கு தேவையான மக்காச்சோளம், சோயா புண்ணாக்கு, தவிடு உள்ளிட்ட மூலப்பொருட்கள் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டு, நாமக்கல் ரயில் நிலையத்தில் இறக்கி லாரிகள் மூலம் கோழிப்பண்ணைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்தநிலையில், சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து எண்ணெய் எடுக்கப்பட்ட புண்ணாக்கு ரயில் மூலம் நாமக்கல் வந்தது. நாமக்கல் ரயில் நிலையத்தில் இருந்து லாரிகளில் லோடு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் ஓரு லாரி அதிகாலை 2.30 மணியளவில், நாமக்கல்–சேலம் ரோட்டில் என்.ஜி.ஜி.ஓ காலனி வழியாக சிலுவம்பட்டிக்கு சென்றது.

சின்னமுதலைப்பட்டி பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தில் அந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரியை ஓட்டி வந்த ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த லாரி டிரைவர் ரகு (25) என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு, தனியார் ஆஸ்பத்தரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். லாரி கவிழ்ந்ததை அடுத்து அப்பகுதியில் இருந்த பள்ளம் அவசர அவசரமாக மூடப்பட்டது.

Updated On: 5 Dec 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு