/* */

நாமக்கல்லில் டிஎன்பிஎஸ்சி குரூப் 7 பி தேர்வு 1,147 பேர் பங்கேற்பு: 931 பேர் ஆப்சென்ட்

5 மையங்களில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 7 பி போட்டித்தேர்வில், 1,147 பேர் பங்கேற்றனர். 931 பேர் கலந்து கொள்ளவில்லை.

HIGHLIGHTS

நாமக்கல்லில் டிஎன்பிஎஸ்சி குரூப் 7 பி தேர்வு  1,147 பேர் பங்கேற்பு: 931 பேர் ஆப்சென்ட்
X

ஜெய்விகாஸ் பள்ளியில் நடைபெற்ற குரூப் 7பி, போட்டித்தேர்வு மையத்தை டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பாலுசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம், இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள, 42 செயல் அலுவலர் பணியிடங்களுக்கு, குரூப் 7 பி, போட்டித்தேர்வு நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் கோட்டை நகராட்சி உயர்நிலைப்பள்ளி, அரசு தெற்கு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளிகள், நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி, ஜெய்விகாஸ் மெட்ரிக் பள்ளி என, 5 மையங்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வுக்கு, 2,078 பேர் விண்ணப்பித்திருந்தனர். காலை 9:30 முதல், மதியம், 12:30 மணி வரை தமிழ் மொழி தேர்வும், மதியம், 2 முதல், மாலை 5 மணி வரை, இந்து சமயம் சார்ந்த பொது அறிவுத்தேர்வும் நடந்தது.

தேர்வுக்கு விண்ணப்பித்த, 2,078 பேரில், 1,147 பேர் தேர்வு மட்டுமே எழுதினர். இது, 55.20 சதவீதமாகும். 931 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பாலுசாமி தேர்வு மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். போட்டித்தேர்வு மையங்களில், போலீசார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Updated On: 12 Sep 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு