/* */

நாமக்கல்லில் 108ம் ஆண்டு ஸ்ரீ ராமநவமி உற்சவம் நாளை துவக்கம்

நாமக்கல்லில் நாளை (10ம் தேதி) 108ம் ஆண்டு ஸ்ரீராமநவமி உற்சவம் துவங்குகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் 108ம் ஆண்டு ஸ்ரீ ராமநவமி உற்சவம் நாளை துவக்கம்
X

பைல் படம்

நாமக்கல் ஸ்ரீ ராமகிருஷ்ண மாருத்யாதி பஜன கான சபா சார்பில் ஆண்டு தோறும் ஸ்ரீராமநவமி உற்சவ விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 108-ம் ஆண்டு ஸ்ரீ ராமநவமி உற்சவ விழா நாளை 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோட்டை மெயின் ரோட்டில் உள்ள கார்னேஷன் சத்திரத்தில் துவங்குகிறது.

இந்த விழா வரும் 19ம் தேதி செவ்வாய்க்கிழமை வரை நடைபெறுகிறது. 9 நாட்களும் அர்ச்சனை, தீபாராதனை மற்றும் திவ்ய நாம பஜனை சங்கீர்த்தனம் முதலிய வையவங்களுடன் நடைபெற உள்ளது. தினமும் மாலை 7 மணியளவில் விஷ்ணு ஸகஸ்ர நாம பாராயணமும், தொடர்ந்து பூஜை திவ்ய நாம பஜனை மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.

வரும் 18ம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணியளவில், திருக்கல்யாண உற்சவம், இரவு வசந்தகேளிக்கை, பவளிம்பு உற்சவம் மற்றும் திவ்யநாமம் பூஜைகள கிருஷ்ணமூர்த்தி பட்டாச்சாரியார் மற்றும் வெங்கடசேஷன் ஆகியோர் நடத்திவைக்கின்றனர்.

19ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு - ஸ்ரீ ஆஞ்சநேயர் உற்சவம் நாகராஜ பட்டாச்சார், நாராயணன் ஆகியோர் நடத்திவைக்கின்றனர். தினசரி இரவு 7மணிக்கு மோகனூர் பத்மநாப ராவ் பாகவதர், மற்றும் உள்ளூர் பாகவதர்கள் சார்பில் பஜனை நடைபெறும். 8ம் தேதி இரவு 7 மணிக்கு பஜனை திவ்யநாமம் நடைபெறுகிறது. 19ம் தேதி காலை 10மணிக்கு கல்யாண உற்சவமும், இரவு 6 மணிக்கு பவளிம்பு உற்சவம் மோகனூர் சீதாராம பாகவதர் மற்றும் குழுவினர் சார்பில் நடைபெறுகிறது. பொதுமக்கள் அனைவரும் ஸ்ரீராமநவமி உற்சவத்தில் கலந்துகொள்ளுமாறு ஸ்ரீ ராமகிருஷ்ண மாருத்யாதி பஜன கான சபாவினர் தெரிவித்துள்ளனர்.

Updated On: 8 April 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சைக்கிள் ஓட்டினா இவ்ளோ நன்மைகளா..? அட..வாங்கப்பா சைக்கிள்...
  2. சினிமா
    திருமண நாளில் நடிகை செய்த காரியம்...! சொக்கி விழுந்த ரசிகர்கள்..!...
  3. நாமக்கல்
    வரும் 10ம் தேதி முதல் கோமாரி நோய் தடுப்பூசி : 2.98 லட்சம்...
  4. நாமக்கல்
    நாளை நாமக்கல் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை : அலுவலர்கள் நியமனம்..!
  5. இந்தியா
    பெங்களூருவில் ஒரே நாளில் அதிக மழை! 133 ஆண்டுகால சாதனை முறியடிப்பு
  6. திருமங்கலம்
    சோழவந்தானில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழா..!
  7. நாமக்கல்
    4 மாநில பறவைக்காய்ச்சல் நோய் தாக்கம் : தமிழகத்தில் தடுப்பு...
  8. உசிலம்பட்டி
    விக்கிரமங்கலம் இறகு பந்து போட்டி பரிசளிப்பு விழா..! .
  9. வீடியோ
    🔴LIVE : கலைஞரின் 101ஆவது பிறந்த நாள் விழா மு. க. ஸ்டாலின் பங்கேற்பு !...
  10. லைஃப்ஸ்டைல்
    அறிவியல் கண்டுபிடிப்புகளால் ஆரோக்யம் இழந்த மனிதர்கள்..!