திருமண நாளில் நடிகை செய்த காரியம்...! சொக்கி விழுந்த ரசிகர்கள்..! அதுக்காக இப்படியா?

திருமண நாளில் நடிகை செய்த காரியம்...! சொக்கி விழுந்த ரசிகர்கள்..! அதுக்காக இப்படியா?
X
பாத் டப்பில் குளித்துக் கொண்டிருக்கும்போது அதனை அவரது கணவரே புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

திருமண நாள் அதுவுமா இப்படியா ஃபோட்டோ போடுவாங்க என பிரபல நடிகையை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். சிலர் கழுவி ஊற்றியும் வருகின்றனர்.

தனது மூன்றாவது திருமண நாளை தாய்லாந்தில் கொண்டாட முடிவு செய்து பிரபல நடிகையும், அவரது கணவரும் தாய்லாந்து சென்றிருக்கும் நிலையில், நடிகை வெறும் நுரையுடன் பாத் டப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இவர் வேறு யாருமில்லை, சகுனி, மாசு என்கிற மாசிலாமணி ஆகிய படங்களில் நடித்த பிரபல கன்னட நடிகை பிரணிதாதான். இவரது புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி ரசிகர்களுக்கும் அறிமுகமான முகம்தான் பிரணீதா. கன்னட திரைப்படங்களில் நடிகையாக அறிமுகமானவர், பின் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் நடித்தார்.

அருள்நிதி ஜோடியாக தமிழில் உதயன் படத்தில் அறிமுகமான இவர் கார்த்தி ஜோடியாக சகுனி படத்தில் நடித்து பிரபலமானார். பின்னர் சூர்யா - வெங்கட் பிரபு இணைந்த மாசு படத்திலும் நடித்திருந்தார். கடைசியாக அதர்வாவுடன் ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் மண்ணைக் கவ்விய நிலையில், தமிழில் வேறு பட வாய்ப்புகள் அமையவில்லை. இருந்தாலும் கன்னடத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பிரணீதா. கடந்த 2021ம் ஆண்டு கொரோனா லாக்டவுன் சமயத்தில்தான் இவர்களது திருமணம் நடைபெற்றது. இதற்கு பெரிய அளவில் யாரும் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. கடந்த ஆண்டு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது.

இந்நிலையில் 3வது திருமண நாளை கொண்டாட, தாய்லாந்து சென்றிருக்கிறார். குழந்தை பிறந்த பிறகு சினிமாவிலும் தலைகாட்டாமல், மீடியா வெளிச்சத்திலும் படாமல் இருந்தவர் தற்போது கன்னடத்தில் பிராமண அவதாரா படத்தில் சீதையாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இவர்களது திருமண நாளை தாய்லாந்தில் கொண்டாடியபோது வெளியான இந்த புகைப்படம்தான் தற்போது வைரலாகி வருகிறது.

பாத் டப்பில் குளித்துக் கொண்டிருக்கும்போது அதனை அவரது கணவரே புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். குளித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் பார்த்ததும் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்துவிட்டனர். பின்னர் அது அவரே வெளியிட்ட படம்தான் என்பதை தெரிந்து அவரை திட்ட ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில், தற்போது பிரணீதா புகைப்படம் வைரலாகி வருகிறது. இது தொடர்பான மீம்களும் வைரலாகி வருகின்றன.

Tags

Next Story