/* */

கொங்குநாடு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் ஹேக்கத்தான் போட்டியில் சாதனை

கொங்குநாடு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் ஹேக்கத்தான் போட்டியில் சாதனை படைத்து உள்ளனர்.

HIGHLIGHTS

கொங்குநாடு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள்  ஹேக்கத்தான் போட்டியில் சாதனை
X

அகில இந்திய ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்ற கொங்குநாடு பொறியியல் கல்லூரி மாணவர்கள்.

மத்திய அமைச்சகத்தின் புத்தாக்கப்பிரிவு, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், பெர்ஸிஸ்டன் சிஸ்டம் மற்றும் ஐ4சி ஆகியவை இணைந்து ஹேக்கத்தான் போட்டியை நடத்தின. இப்போட்டியில் கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு அனைத்து சுற்றுகளிலும் வெற்றிபெற்றனர். மெக்கானிக்கல் துறை மாணவர்கள் 3 அணிகளில் கிராண்ட் பைனலில் பங்குபெற்றனர்.

ராஜஸ்தானின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் கீழ் மையப்படுத்தப்பட்ட கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகளை மீண்டும் மேம்படுத்துவதற்கான புதுமையான அணுகுமுறை என்ற பிரச்சினை அறிக்கைக்கான தீர்வுகளை மாணவர்களின் முதல் குழு வழங்கியது. தேசிய பேரிடர் மீட்புபடையின் கீழ் (என் டி ஆர்எப்) நீருக்கடியில் ஆர்.ஓ.வி. என்ற பிரச்சனை அறிக்கைக்கான தீர்வுகளை இரண்டாவது குழு வழங்கியது. கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் நிலையான மற்றும் தொடர்பில்லாத வருகை அமைப்பு என்ற பிரச்சனை அறிக்கைக்கான தீர்வுகளை மூன்றாவது குழு வழங்கியது. இம்மூன்று பிரச்சனைகளுக்கான அறிக்கை தொடர்பாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திற்கு தீர்வு வழங்கப்பட்டதைப் பாராட்டி, கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் பதிப்பில் வெற்றியாளர் என்ற பட்டமும் ரூ.1லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

ஹேக்கத்தான் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. கல்வி நிறுவன சேர்மன் பெரியசாமி, செயலாளர் தங்கவேல், பொருளாளர் தென்னரசு, துணைத்தலைவர் அருண்குமார், இணை செயலாளர் அசோக்குமார், கல்லூரி முதல்வர் அசோகன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 12 Sep 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு