/* */

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் 62 ஆயிரம் குழந்தைகளுக்கு சிறப்பு வகுப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித்திட்டத்தின் கீழ் 62 ஆயிரம் குழந்தைகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.

HIGHLIGHTS

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் 62 ஆயிரம் குழந்தைகளுக்கு சிறப்பு வகுப்பு
X

இல்லம் தேடி கல்வித்திட்டத்தின் கீழ், எர்ணாபுரம் தொடக்கப்பள்ளியில் நடைபெற்று வரும் சிறப்பு வகுப்பினை, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இல்லம் தேடி கல்வித்திட்டத்தின் கீழ் எர்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்று வரும் சிறப்பு வகுப்பினை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு நேரடியாக வந்து கல்வி கற்க இயலாத சூழல் நிலவியது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்கும் திறன் பாதிக்கப்படாமல் இருக்கவும், கற்றல் திறனை வலுப்படுத்தவும், 2 ஆண்டு காலமாக நிலவிய கற்றல் இடைவெளியை போக்கிடி இல்லம் தேடி கல்வி திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தா.

இத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவியர்களின் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சமுதாய கூடம் போன்ற பொது இடங்களில் போதிய மாணவ, மாணவிகளை அமர வைத்து தன்னார்வலர்களைக் கொண்டு எளிய முறையில், தினசரி சுமார் 1.30 மணி நேரம் வரை கல்வி கற்பிக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் 4,553 பெண் தன்னார்வலர்களைக் கொண்டு, 62,083 மாணவ மாணவியர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு கற்கும் திறன் மேம்படுத்தப்பட்டு வருகின்றது என்றார்.

தொடர்ந்து கீரம்பூர் அரசு துணை சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு நோயாளிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள், மருந்துகள் கையிருப்பு போன்றவற்றை பார்வையிட்டார். இந்த ஆய்வுகளின்போது சுகாதாரத்துறை துணை இயக்குநர் பிரபாகரன், பிஆர்ஓ சீனிவாசன், வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 May 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  5. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  6. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...