/* */

நாமக்கல்லில் வாயில் துணியைக்கட்டி காங்கிரஸ் கட்சியினர் மவுன ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் வாயில் துணியைக்கட்டி மவுன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் வாயில் துணியைக்கட்டி காங்கிரஸ் கட்சியினர் மவுன ஆர்ப்பாட்டம்
X

வன்முறையை எதிர்ப்போம், கருத்து மாறுபாடுகளுக்கு தீர்வு கொலையல்ல என்பதை வலியுறுத்தி, நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில், வாயில் துணியைக்கட்டி மவுன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை முன்னிட்டு, நாமக்கல்லில் காங்கிரசார் வாயில் துணி கட்டிக்கொண்டு மவுன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மறைந்த பிரதமரும், காங்கிரஸ் தலைவருமான ராஜிவ் காந்தி கொலை வழக்கில், கொலையாளிகளுக்கு, சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பை யொட்டி, வன்முறையை எதிர்ப்போம், கருத்து மாறுபாடுகளுக்கு தீர்வு கொலையல்ல என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் வாயில் துணிக்கட்டி, மவுன ஆர்ப்பாட்டம் நடத்த, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிவித்துள்ளார்.

இதையொட்டி நாமக்கல் பார்க் ரோட்டில் நடைபெற்ற மவுன ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் தலைமை வகித்தார். நகர காங்கிரஸ் தலைவர் மோகன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் செல்வராஜ், வட்டார தலைவர்கள் எருமப்பட்டி தங்கராஜ், புதுச்சத்திரம் இளங்கோ, சேந்தமங்கலம் ஜெகநாதன், கொல்லிமலை குப்புசாமி, வெண்ணந்தூர் சொக்கலிங்கமூர்த்தி, நாமகிரிப்பேட்டை ரங்கசாமி, டவுன் பஞ்சாயத்து காங்கிரஸ் தலைவர்கள் சிங்காரம், சீனிவாசன், பூபதி,இளங்கோ, சண்முக சுந்தரம், செல்வசேகரன், ராசிபுரம் நகர காங்கிரஸ் தலைவர் முரளி, மாநில மகளிர் காங்கிரஸ் துணை செயலாளர் மகேஸ்வரி, சிவாஜி மன்றம் சேகர், முன்னாள் மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் கலைச்செல்வி, காந்தி என்கிற வரதராஜ், பிள்ளா நல்லூர் டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் கந்தசாமி உள்ளிட்ட பலர் மவுன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 19 May 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்