/* */

நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.24.24 லட்சம் மதிப்பு 61 டன் காய்கறிகள் விற்பனை

பொங்கல் பண்டிகையையொட்டி நாமக்கல் உழவர் சந்தையில் 61 டன் காய்கறிகள் ரூ.24.24 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.24.24 லட்சம் மதிப்பு 61 டன் காய்கறிகள் விற்பனை
X

பைல் படம்.

நாமக்கல் உழவர் சந்தையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் 61 டன் எடையுள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் ரூ. 24.24 லட்சம் மதிப்பில் விற்பனை நடைபெற்றது.

நாமக்கல் பார்க் ரோட்டில் உழவர் சந்தை செயல்படுகிறது. இங்கு, நாமக்கல் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், தங்களுடைய தோட்டங்களில் விளைந்த காய்கறி, பழங்கள், கீரை வகைகளைக் கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனர். வழக்கமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் உழவர் சந்தையில் அதிக அளவில் விற்பனை நடைபெறும். தற்போது பொங்கல் பண்டிகையைமுன்னிட்டு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காய்கறி மற்றும் பழங்கள் வரத்து அதிகமாக இருந்தது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் பலரும் கூடுதலாக காய்கறிகளை வாங்க அதிக அளவில் உழவர் சந்தைக்கு வந்து தேவையானவற்றை வாங்கிச் சென்றனர். இதையொட்டி நேற்று வியாழக்கிழமை போகிப்பண்டிகையன்று, 170 விவசாயிகள், காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர்.கத்தரிக்காய், பீர்க்கன், வெண்டை, புடலை, சுரைக்காய், பூசணி. அவரை, வாழைக்காய், முள்ளங்கி, உருளைக் கிழங்கு, வெங்காயம் மற்றும் தேங்காய் உள்ளிட்ட, 24 ஆயிரத்து 515 கிலோ காய்கறிகள், 11 ஆயிரத்து 450 கிலோ பழங்கள் என, மொத்தம் 35 ஆயிரத்து, 965 கிலோ விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதன் மூலம் ஒரே நாளில் ரூ.14 லட்சத்து, 72 ஆயிரத்து, 490 அளவுக்கு விற்பனை நடைபெற்றது.

இன்று வெள்ளிக்கிழமை பொங்கல் பண்டிகை நாளில், 152 விவசாயிகள், 18 ஆயிரத்து, 600 கிலோ காய்கறிகள், 6,980 கிலோ பழங்கள் என, மொத்தம் 25 ஆயிரத்து, 580 கிலோ விற்பனைக்கு கொண்டு வந்தனர். அவை, ரூ. 9 லட்சத்து, 51 ஆயிரத்து, 570 மதிப்பில் விற்பனையானது. கடந்த 2 நாட்களில் 8,650 வாடிக்கையாளர்கள், தங்கள் வீட்டுக்கு தேவையான காய்கறி, பழங்கள், கீரை வகைகளை வாங்கி சென்றனர். இதன் மூலம் 2 நாட்களில் உழவர் சந்தையில் மொத்தம் 61 டன் எடையுள்ள காய்கறி மற்றும் பழங்கள் ரூ. 24 லட்சத்து 24 ஆயிரத்து 60 மதிப்பில் உவிற்பனை நடைபெற்றுள்ளது.

Updated On: 14 Jan 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்