/* */

ராஜ்யசபா எம்.பி., தேர்தல்: திமுக வேட்பாளராக நாமக்கல் ராஜேஷ்குமார் அறிவிப்பு

ராஜ்சபா எம்.பி., பதவிக்கு திமுக வேட்பாளராக நாமக்கல் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

ராஜ்யசபா எம்.பி., தேர்தல்: திமுக வேட்பாளராக நாமக்கல் ராஜேஷ்குமார் அறிவிப்பு
X

கே.ஆர்.என்.ராஜேஷ்குமார்.

திமுக மூத்த முன்னோடி கே.ஆர்.ராமசாமியின் பேரனான கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், எம்.காம் பட்டம் பெற்று, கூட்டுறவு மேலாண்மையில் டிப்ளோ பட்டம் பெற்றுள்ளார்.

ராஜேஷ்குமார் கடந்த 1994ம் ஆண்டு முதல் திமுகவில் உறுப்பினராக இருந்து வருகிறார். 1998ம் ஆண்டு கிளைக் கழக செயலாளராவும், ஒன்றிய பிரதிநிதியாகவும், வெண்ணந்தூர் ஒன்றிய துணை செயலாளராகவும் பணியாற்றினார். பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய ராஜேஷ்குமார் 2011 முதல் 2020ம் ஆண்டுவரை மாவட்ட இளைஞரணி செயலாளராக பணியாற்றி வந்தார். 2020ம் ஆண்டு முதல் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.

கடந்த சட்டசபை தேர்தலில் நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட ராஜேஷ்குமார் விருப்ப மனு கொடுத்திருந்தார். அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இருப்பினும், கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட இராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற தேர்தல் பணியாற்றி திமுக தலைவர் ஸ்டாலினிடம் பாராட்டு பெற்றார்.

ஆரம்பம் முதல் திமுக நடத்திய போராட்டங்கள், கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி பாராட்டுப் பெற்ற ராஜேஷ்குமார், தற்போது ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் போட்டியின்றி தேர்வு பெறுவதற்கு வாய்ப்புள்ளது.

Updated On: 14 Sep 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்