/* */

ஐ.சி.டி.எஸ் சார்பில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி முகாம்

நாமக்கல்லில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஐ.சி.டி.எஸ் சார்பில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி முகாம்
X

நாமக்கல்லில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் நடைபெற்ற, உள்ளாட்சி பிரிதிநிகளுக்கான பயிற்சி முகாமை, நாமக்கல் முனிசிபாலிட்டி தலைவர் கலாநிதி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். 

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம், நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பூபதி, ஊராட்சி ஒன்றிய தலைவர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் சண்முகபிரியா பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் பிறக்கின்ற குழந்தைகள் வயதுக்கு ஏற்ற உயரத்தில் இல்லை. மாநில சராசரியைவிட குறைவாகவும், மேலும் உயரத்திற்கேற்ற எடை இன்றியும் காணப்படுகின்றனனர். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் வழங்கப்படும் தாய்ப்பாலானது, குழந்தையின் எதிர்கால வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் வழங்கப்படுவதில்லை என்பது சுகாதாரத் துறையினரின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

பிறந்தது முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு ரத்த சோகை பாதிப்புள்ளது. இது மிகவும் முக்கிய பிரச்னையாகும். தற்போதுள்ள குழந்தைகளை மிகவும் ஆரோக்கியமுடன் வளர்த்தால் மட்டுமே, அடுத்த தலைமுறை மிகவும் ஆரோக்கியமாக அமையும். மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் மக்கள் பிரதிநிதிகள் குழு, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து முறையாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் வசிக்கும் கர்ப்பிணிகள் ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்வதையும், கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து மாத்திரைகள் உட்கொள்வதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பேசினார்.

இப்பயிற்சி முகாமில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி ஒன்றியம், கிராம பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முகாமிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Updated On: 23 March 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  2. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  3. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  4. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  6. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  7. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  8. வீடியோ
    ஒரே நாளில் 25,000 கிலோ தங்கம் |என்ன நடக்கிறது தமிழகத்தில்?#gold...
  9. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  10. வீடியோ
    🔴LIVE : சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி ||...