/* */

நாமக்கல் ராஜேஷ்குமாருக்கு மீண்டும் ராஜ்யசபா எம்பி பதவி: திமுகவினர் உற்சாகம்

நாமக்கல் ராஜேஷ்குமாருக்கு மீண்டும் ராஜ்சயபா எம்.பியாக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

HIGHLIGHTS

நாமக்கல் ராஜேஷ்குமாருக்கு மீண்டும் ராஜ்யசபா எம்பி பதவி: திமுகவினர் உற்சாகம்
X

ராஜேஷ்குமாருக்கு, மீண்டும் ராஜ்சயபா எம்.பியாக போட்டியிட வாய்ப்பளித்தமைக்கு வரவேற்பு தெரிவித்து, நாமக்கல் மணிக்கூண்டு அருகில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர்.

நாமக்கல் ராஜேஷ்குமாருக்கு மீண்டும் ராஜ்சயபா எம்.பியாக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதை கிழக்கு மாவட்ட திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

தமிழகத்தில் காலியாகும் 4 ராஜ்சயபா எம்.பி பதவிக்கான தேர்தல் வருகிற ஜூன் 10ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதில் திமுக சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்களின் பட்டியலை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக உள்ள ராஜேஷ்குமார் கடந்த ஆண்டு முதல் திமுக ராஜ்யசபா எம்.பியாக பணியாற்றி வருகிறார். தமிழக முதல்வரின் ஆலோசனையின் பேரில், அவர் ராஜ்யசபாவில் பல முறையில் தமிழக அரசுக்கு மத்திய அரசு மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களை வாதாடி கேட்டுப் பெற்றுள்ளார். இதற்காக அவரைப் பலரும் பாராட்டியுள்ளனர். இந்த நிலையில் ராஜேஷ்குமாருக்கு மீண்டும் திமுக எம்.பியாக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையொட்டி நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள நாமக்கல், புதுச்சத்திரம், ராசிபுரம், சேந்தமங்கலம், எருமப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்தனர். நாமக்கல் மணிக்கூண்டு அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கிழக்கு நகர திமுக பொறுப்பாளரும், நகராட்சி துணை சேர்மனுமான பூபதி தலைமை வகித்தார். நகராட்சி சேர்மன் கலாநிதி, மாநில இலக்கிய அணி புரவலர் மணிமாறன், கவுன்சிலர்கள் சரவணன், ஈஸ்வரன் உள்ளிட்ட திரளானவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 16 May 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்