/* */

நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 373 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40,127 ஆக உயர்ந்தது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
X

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் வரை தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த ஒரு வாரமாக படிப்படியாக எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இன்று ஒரேநாளில் நாமக்கல், குமாரபாளையம், ராசிபுரம், ப.வேலூர், சேந்தமங்கலம், காளப்பாநாய்க்கன்பட்டி, நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம், வெப்படை, திருச்செங்கோடு, பெரியமணலி, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 373 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன்மூலம் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 40,127 ஆக உயர்ந்துள்ளது. இன்று 734 பேர் சிகிச்சை குணமாகி வீட்டுக்கு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 35,458 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 4,317 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி இன்று 6 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 352 ஆக உயர்ந்துள்ளது.

Updated On: 13 Jun 2021 2:58 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  3. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  4. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  6. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  7. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  8. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  9. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  10. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்