பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கல்
Tirupur News- அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் சித்திரைத் தோ்த் திருவிழாவில் பங்கேற்ற பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
Tirupur News,Tirupur News Today- அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் சித்திரைத் தோ்த் திருவிழாவில் பங்கேற்ற பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மைப் பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் சித்திரைத் தோ்த் திருவிழா ஏப்ரல் 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஏப்ரல் 28-ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற்றது.
இதில், பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குரு குல வேதாகம பாட சாலை மாணவா்கள் நாள்தோறும் வேத பாராயணம், திருமுறை பாராயணம் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வந்தனா். மேலும், இவா்களுக்கு மஹோத்சவ பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, பயிற்சியில் பங்கேற்ற வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், வேதாகம பாடசாலை முதல்வா் ஸ்ரீசுந்தரமூா்த்தி சிவம் வரவேற்றாா். அவிநசி வாகீசா் மடாலயம் காமாட்சிதாச சாமிகள் ஆசியுரை வழங்கினாா்.
தொடா்ந்து, அவிநாசி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ஆ.சக்திவேல் பாடசாலை மாணவா்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினாா்.
இதையடுத்து, அவிநாசி கோயில் தலைமை குருக்கள் ஏ.எஸ்.சிவகுமார சிவாச்சாரியா், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அறங்காவலா் கே.எம். சுப்பிரமணியம், அவிநாசி பழனியப்பா பள்ளி நிா்வாக இயக்குநா் டி. ராஜ்குமாா் ஆகியோா் பேசினா்.
கோயில் செயல் அலுவலா் வெ. பீ. சீனிவாசன், அறங்காவலா்கள் பொன்னுசாமி, ஆறுமுகம், விஜயகுமாா், கவிதாமணி உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu