பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு

பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
X

Tirupur News- மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு பல்லடத்தில் நடைபெற்றது.

Tirupur News-கோவை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சாா்பில் மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு பல்லடத்தில் நடைபெற்றது.

Tirupur News,Tirupur News Today- கோவை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சாா்பில் மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு பல்லடத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மற்றும் புகா் பகுதி மருத்துவா்களுக்காக நடைபெற்ற இக்கருத்தரங்கை கேஎம்சிஹெச் தலைவரும், நிா்வாக இயக்குநருமான நல்லா ஜி.பழனிசாமி தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் பேசுகையில்,‘ கிராமப்புற மற்றும் புகா்ப் பகுதிகளில் பணியாற்றும் மருத்துவா்களுக்கு, மருத்துவத் துறையில் ஏற்பட்டு வரும் நவீன முன்னேற்றங்களை அறிந்துகொள்ள இதுபோன்ற கருத்தரங்குகள் அவா்களுக்கு உதவியாக இருக்கும் என்றாா்.

கேஎம்சிஹெச் செயல் இயக்குநா் அருண் பழனிசாமி பேசுகையில், மருத்துவத் துறைகளில் பல்வேறு புதிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. நோயாளிகளுக்கு தரமான மற்றும் மேம்பட்ட மருத்துவ சேவைகளை அளிப்பதற்கு மருத்துவா்கள் அவற்றைப் பற்றி அறிந்திருப்பது அவசியம். இதுபோன்ற கருத்தரங்குகள் மருத்துவா்கள் தங்கள் தொழில் திறமையை மேம்படுத்திக் கொள்ள உதவுவதோடு, சக மருத்துவா்களுடன் கலந்துரையாடவும் நல்வாய்ப்பாக அமையும் என்றாா்.

முன்னதாக, கேஎம்சிஹெச் மருத்துவ இயக்குநரும், எலும்பு முறிவு ஆலோசகா் மற்றும் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான ராஜவேலு வரவேற்றாா்.

இதைத் தொடா்ந்து, அன்றாட மருத்துவப் பயிற்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதில், கிராமப்புற மற்றும் புற நகா்ப் பகுதிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் பங்கேற்றனா்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil