/* */

நாமக்கல் மாவட்டம் 10ம் வகுப்பு தேர்வில் 88.88% தேர்ச்சி: மாநிலத்தில் 27ம் இடம்

நாமக்கல் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 88.88 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் 27ம் இடம் பெற்றுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டம் 10ம் வகுப்பு தேர்வில் 88.88% தேர்ச்சி: மாநிலத்தில் 27ம் இடம்
X

ஸ்ரேயாசிங், நாமக்கல் கலெக்டர்.

நாமக்கல் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 88.88 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் 27ம் இடம் பெற்றுள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், 303 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 10,384 மாணவர்களும், 9,405 மாணவிகளும், மொத்தம் 19,789 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 8,839 மாணவர்களும், 8,750 மாணவிகளும் எ ன மொத்தம் 17,589 தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி 85.12 சதவீதம், மாணவிகள் தேர்ச்சி 93.04 சதவீதம். மாவட்த்தின் மொத்த தேர்ச்சி 88.88% சதவீதம். மாணவர்களை விட 7.92 சதவீதம் மாணவிகள் அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி அடிப்படையில் நாமக்கல் மாவட்டம், மாநில அளவில் 27ஆம் இடம் பெற்றுள்ளது.

அரசு பள்ளிகள்:

நாமக்கல் மாவட்டத்தில் 153 அரசுப் பள்ளிகளை சார்ந்த 5,548 மாணவர்கள், 5,288 மாணவிகள் என மொத்தம் 10,836 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 4,281 மாணவர்கள், 4,780 மாணவிகள் என மொத்தம் 9,061 பேர் தேர்ச்சி பெற்றனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 83.62% ஆகும்.

ஆதிதிராவிடர் நல பள்ளிகள்:

நாமக்கல் மாவட்டத்தில் 2 ஆதிதிராவிட நல பள்ளிகளைச் சார்ந்த 61 மாணவர்களும் 69 மாணவிகளும் என மொத்தம் 130 பேர், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினார்கள். இதில் 46 மாணவர்களும் 62 மாணவிகளும் என மொத்தம் 110 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 84.61 ஆகும்.

பழங்குடியினர் நல பள்ளிகள்:

நாமக்கல் மாவட்டத்தில் 5 பழங்குடியினர் நல (ஜி.டி.ஆர்.) பள்ளிகளை சார்ந்த 160 மாணவர்களும், 170 மாணவிகளும் என மொத்தம் 330 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 106 மாணவர்களும், 133 மாணவிகளும் என மொத்தம் 239 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 72.42% ஆகும்.

இந்த ஆண்டு மொத்தம் 99 பள்ளிகள், 10ம் வகுப்பில், 100 சதவீதம் பெற்றுள்ளன. மொத்தம் 14 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

Updated On: 20 Jun 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லத்தின் லட்சுமி..உள்ளத்தின் மகிழ்ச்சி நீ..! இனிய
  2. லைஃப்ஸ்டைல்
    புதுமனை புகுவிழா வாழ்த்துக்களும் சடங்குகளும்
  3. நாமக்கல்
    ஓட்டு எண்ணும் பணி முழுமையாக சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்படும் :...
  4. நாமக்கல்
    தண்ணீர்பந்தல் சுப்பிமணியசாமி கோயிலில் வரும் 26ம் தேதி கும்பாபிசேக
  5. லைஃப்ஸ்டைல்
    தினமும் நெல்லிக்காய் சாப்பிடுங்க..! உங்க சரும அழகை பாருங்க..!
  6. வீடியோ
    🔴 LIVE : அமமுக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் செய்தியாளர்...
  7. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...
  8. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  9. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...
  10. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்