/* */

நாமக்கல்லில் 21-ம் தேதி இயற்கை வேளாண்மை குறித்து இலவச பயிற்சி

நாமக்கல்லில் வருகிற 21-ம் தேதி விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்த இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் 21-ம் தேதி இயற்கை வேளாண்மை குறித்து இலவச பயிற்சி
X

பைல் படம்.

நாமக்கல் வேளாண் அறிவில் நிலைய (கே.வி.கே) தலைவர் டாக்டர் அழகுதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வருகிற 21ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இயற்கை வேளாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சியில் இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், இயற்கை வேளாண்மை வழிமுறைகள், பயிர் சுழற்சி முறைகள், பயிர்களை தேர்வுசெய்தல், கலப்பு மற்றும் ஊடுபயிர் சாகுபடி, விதைநேர்த்திமுறைகள், இயற்கைமுறையில் மண்வளமேம்பாட்டு முறைகள், மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையைஅதிகப்படுத்துதல், பண்ணையில் கிடைக்கக்கூடிய கழிவுகளைக்கொண்டு இயற்கைஉரம் தயாரிக்கும் முறைகள், மண்புழு உர உற்பத்திமுறைகள், இயற்கை வேளாண்மை முறையில் பூச்சி மற்றும் நோய்கள் கட்டுப்பாடு, பஞ்சகாவியா, ஜீவாமிர்தம், அமிர்தகரைசல், மீன் அமிலம் யாரிக்கும் செயல்முறைவிளக்கம் மற்றும் இயற்கைவேளாண்மைக்கேற்ற சான்றளிப்பு முறைகள் குறித்து விரிவாக பயிற்சி அளிக்கப்படும். இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

விருப்பமுள்ளோர் பயிற்சி மையத்திற்கு நேரில் வந்தோ, அல்லது 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொண்டோ முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 13 July 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை