/* */

குடும்ப ஓய்வூதியர்கள் ஆன்லைன் மூலம் நேர்காணல் செய்யலாம்: கலெக்டர்

நாமக்கல் மாவட்ட குடும்ப ஓய்வூதியதாரர்கள் இன்டர்நெட் மூலம் ஆன்லைனில் நேர்காணல் செய்யலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

குடும்ப ஓய்வூதியர்கள் ஆன்லைன் மூலம் நேர்காணல் செய்யலாம்: கலெக்டர்
X

கலெக்டர் ஸ்ரேயாசிங்.

இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்டக் கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியர்கள்/ குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை கருவூலத்தில் ஆண்டு நேர்காணல் செய்யப்பட வேண்டும். கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 2020 மற்றும் 2021 ம் ஆண்டிற்கான நேர்காணல் நடைபெறவில்லை. எனவே தமிழ் நாடு அரசு ஓய்வூதியர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் நேரில் கருவூலத்திற்கு வருவதில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கபடுகிறது. எனவே ஜீவன் பிரமான் இன்டர்நெட் தளம் மூலமாக ஓய்வூதியர்கள் எலக்ட்ரானிக் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய அஞ்சல் துறை வங்கியின் சேவையை பயன்படுத்தி ஓய்வூதியர்கள் தங்களது இருப்பிடத்திலிருந்தபடியே தபால் துறை பணியாளர்கள் மூலமாக ரூ.70/- கட்டணம் செலுத்தி எலக்ட்ரானிக் õழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம். அரசு இ-சேவா மற்றும் பொது சேவை மையங்களின் மூலம் ஓய்வூதியர்/குடும்ப ஓய்வூதியர்கள் உரிய கட்டணம் செலுத்தி எலக்ட்ரானிக் வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்யலாம் . ஓய்வூதியர்கள் சங்கத்தின் மூலமாகவும் கைரேகை குறியீட்டு கருவி பயன்படுத்தி எலக்ட்ரானிக் வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்யலாம். கருவூல முகாம் இலவச சேவையை பயன்படுத்தி ஆன்லைனில் வாழ்நாள் சான்று பதிவு செய்யலாம்.

எலக்ட்ரானிக் வாழ்நாள் சான்று பெற ஓய்வூதியர்கள் ஆதார் எண், பி.பி.ஓ நம்பர், பேங்க் அக்கவுண்ட் நம்பர் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் முதலிய விபரங்களுடன் வாழ்நாள் சான்றிதழ் படிவத்தினை உரிய அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று தபால் மூலம் அனுப்ப வேண்டும். ஓய்வூதியர்கள் / குடும்ப ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றினை லைப் சான்றிதல் இன்டர்நெட்டில் இருந்து டவுன்லோடு செய்து அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும். வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர்கள் இன்டர்நெட் முகவரியிலிருந்து வாழ்வு சான்றிதழை டவுன்லோடு செய்து இந்திய தூதரக அலுவலர் / மாஜிஸ்திரேட் / நோட்டரி பப்ளிக் அலுவலரிடம் வாழ்நாள் சான்று பெற்று சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு தபால் மூலம் அனுப்பலாம்.

மேலும் ஓய்வூதியதாரர்கள் தங்களது விருப்பத்தின்படி நேரடி நேர்காணலுக்கு ஓய்வூதிய புத்தகத்துடன் ஏதேனும் ஒரு அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலத்திற்கு சென்று ஆண்டு நேர்காணல் செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

Updated On: 22 Jun 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கைது
  2. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  4. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  5. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  6. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  7. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  9. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  10. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்