யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கைது

யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கைது
X

யானை தந்தம் விற்க முயன்றவர்கள் கைது

வடவள்ளி பகுதியில் சட்ட விரோதமாக யானை தந்தம் விற்க முயற்சி செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கோவை வனச்சரக எல்லைக்கு உட்பட்ட வடவள்ளி பகுதியில் சட்ட விரோதமாக யானை தந்தம் விற்க முயற்சி செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், கோவை வனச்சரக அலுவலர் தலைமையில் கோவை வனச்சரக பணியாளர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்ட போது, சாய்பாபாகாலனி பகுதியைச் சேர்ந்த விசாகன் (40), நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன்(40), வடவள்ளி பகுதியைச் சேர்ந்த பிரிட்டோ (43) மற்றும் செல்வராஜ் (38) ஆகியோர் யானை தந்தத்தை சட்ட விரோதமாக விற்க முயற்சி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று காலை விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட யானை தந்தத்தை வனத்துறையினர் கைப்பற்றினர். மேலும் யானை தந்தத்தை வைத்திருந்த வடவள்ளி பகுதியைச் சேர்ந்த பிரிட்டோ மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், பிரிட்டோ மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரும் நிபந்தனையுடன் கூடிய ஜாமீனில் நீதிமன்றம் விடுவித்தது. இதனிடையே கைது செய்யப்பட்டவர்களிடம் வனத்துறையினர் நடத்திய விசாரணையில் யானை தந்தத்தை சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த விசாகன் என்பவரது வீட்டில் வைத்திருந்ததாகவும், அதனை சட்ட விரோதமாக விற்பனை செய்ய முயற்சி செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தலைமறைவாக உள்ள விசாகன் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரையும் வனத்துறையினர் தேடி வருகின்றனர். தொடர்ந்து யானை தந்தம் அவர்களுக்கு எப்படி கிடைத்தது?, அதனை யாருக்கு விற்பனை செய்ய முயன்றனர் என்பது குறித்தும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
குடல் ஆரோக்கியத்தை ஆரோக்கியமா வெச்சுக்கணுமா? அப்ப இத கண்டிப்பா பண்ணுங்க!| how to improve gut health in Tamil