/* */

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.2 கோடி மதிப்பில் பருத்தி ஏலம்

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில், ரூ.2 கோடிமதிப்பிலான பருத்தி விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.2 கோடி மதிப்பில் பருத்தி ஏலம்
X

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு, விவசாயிகள் கொண்டுவந்த பருத்தி மூட்டைகள்.

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில், ரூ.2 கோடிமதிப்பிலான பருத்தி விற்பனை செய்யப்பட்டது.

நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில் உள்ள, நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் (என்சிஎம்எஸ்) வாரம்தோறு செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். நாமக்கல், மோகனூர், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம், பேளுக்குறிச்சி, காளப்பநாய்க்கன்பட்டி, வேலகவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த பருத்தியை விற்பனைக்கு கொண்டு வருவார்கள், திருச்செங்கோடு, கொங்கனாபுரம், பள்ளிபாளையம், ஈரோடு, அவிநாசி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை கொள்முதல் செய்வார்கள்.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 6,600 மூட்டை பருத்தியை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் ஆர்சிஎச் ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ. 6,869 முதல் ரூ. 8,825 வரையிலும், சுரபி ரக பருத்தி ரூ. 8,410 முதல் ரூ. 8,699 வரையிலும், கொட்டு ரக பருத்தி ரூ.4,599 முதல் ரூ.7,669 வரையிலும் ஏலம் போனது. ஏலத்தில் மொத்தம் ரூ. 2 கோடி மதிப்பிலான பருத்தி விற்பனை செய்யப்பட்டது.

Updated On: 25 Jan 2023 10:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  2. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  3. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  4. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  5. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  6. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  7. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  8. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  9. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  10. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!