/* */

நாமக்கல்லில் மகளிர் வாழ்வாதார சேவை மையத்தை துவக்கி வைத்த கலெக்டர்

தொழில் மேம்பாட்டினை வலுப்படுத்தும் வகையில், மகளிர் வாழ்வாதார சேவை மையம், நாமக்கல் பூமாலை வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் மகளிர் வாழ்வாதார சேவை மையத்தை துவக்கி வைத்த கலெக்டர்
X

நாமக்கல் பூமாலை வணிக வளாகத்தில் வாழ்வாதார சேவை மையத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் துவக்கி வைத்து, மகளிர் குழுவினருக்கு நிதி உதவியை வழங்கினார்.

நாமக்கல் பூ மாலை வணிக வளாகத்தில், வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் வாழ்வாதார சேவை மையத்தை கலெக்டர் திறந்து வைத்தார்.

வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் உலக வங்கி நிதியுதவியுடன், ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் தொடங்கப்பட்ட திட்டமாகும். இத்திட்டம் நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம், திருச்செங்கோடு, புதுச்சத்திரம் மற்றும் மோகனூர் ஆகிய 4 வட்டாரங்களில் செயல்பட்டு வருகிறது. வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் ஊரகப் பகுதிகளில் தொழில்முனைவுகளை உருவாக்குதல், நிதிசேவைகளுக்கு வழிவகை செய்தல் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியற்றை நோக்கங்களாகக் கொண்டு செயல்படுகிறது. திட்டம் செயல்படுத்தப்படும் வட்டாரங்களில் தொழில் மேம்பாட்டினை வலுப்படுத்தும் வகையில், மகளிர் வாழ்வாதார சேவை மையம், நாமக்கல் பூமாலை வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் துவக்கி வைத்தார்.

மகளிர் வாழ்வாதார மையம் வணிக மேம்பாட்டு சேவைகள், வழிகாட்டல் சேவைகள், கூட்டமைப்புச் சேவைகள், மதிப்புக் கூட்டல் சேவைகளை வழங்கும். இதனை நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்நிகழ்வில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் 6 உற்பத்தியாளர் குழுக்களுக்கு துவக்க நிதியாக ரூ.4,50,000க்கானவங்கி காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் பிரியா, வாழ்ந்துகாட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் ராஜாத்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 30 Jun 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்