/* */

நாமக்கல் நகராட்சி பள்ளியில் கற்றல் திறன் குறித்து குழந்தைகளுடன் கலெக்டர் கலந்துரையாடல்

கொண்டிசெட்டிப்பட்டி நகராட்சிப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளிடம் கற்றல் திறன் குறித்து கலெக்டர் கலந்துரையாடினார்.

HIGHLIGHTS

நாமக்கல் நகராட்சி பள்ளியில் கற்றல் திறன் குறித்து குழந்தைகளுடன் கலெக்டர் கலந்துரையாடல்
X

கொண்டிசெட்டிப்பட்டி நகராட்சிப் பள்ளியில், மாணவர்களின் கற்றல் திறன் குறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் கலந்துரையாடினார்.

நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட, கொண்டிசெட்டிப்பட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வருகை புரிந்தார். அவர் அங்கு படிக்கும் மாணவ மாணவிகளிடம் புத்தகங்களை பார்த்து கதைகளை வாசிக்க சொல்லியும், பாடல்களை பாடச்சொல்லியும் 3-ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்தார். சத்துணவு சமையல் கூடத்தினை அவர் பார்வையிட்டு, உணவுப் பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து கொண்டிசெட்டிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்தும், வங்கிகளுக்கு இணையாக பொதுமக்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சங்கத்தில் செயல்படும் இ-சேவை மையத்தில் வழங்கப்படும் சேவைகள் குறித்து, பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகையினை காட்சிப்படுத்த வேண்டும் என்று அலுவலர்களை அறிவுறுத்தினார். பின்னர், கொண்டிசெட்டிப்பட்டி மற்றும் பெரியப்பட்டி கிராம நிர்வாக அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டார். அப்போது பல்வேறு சான்றுகள் கோரி பொதுமக்கள் விண்ணப்பிக்கும் போது, விரைந்து ஆவணங்கள் சரிபார்த்து அவர்களுக்கு சான்றுகளை அளிக்க ÷ வேண்டும் என விஏஓக்களை அறிவுறுத்தினார்.

Updated On: 9 July 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  3. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  5. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  6. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  7. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!