/* */

ஆன்லைன் மூலம் கார் விற்பனை செய்வதாக ரூ. 2.46 லட்சம் மோசடி

நாமக்கல்லை சேர்ந்தவரிடம் ஆன்லைன் மூலம் கார் விற்பனை செய்வதாக கூறி ரூ. 2.46 லட்சம் மோசடி நடந்து உள்ளது.

HIGHLIGHTS

ஆன்லைன் மூலம் கார் விற்பனை செய்வதாக   ரூ. 2.46 லட்சம் மோசடி
X

நாமக்கல், கணேசபுரம் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது60). சொந்தமாக தொழில் செய்து வருகிறார். அவர், செல்போனில் வந்த கவர்ச்சிகரமான கார் விளம்பரத்தை பார்த்து, ஆன் லைன் மூலம் பழைய கார் வாங்க முடிவு செய்தார். இந்தநிலையில், கர்நாடகா மாநிலம், பெங்களூரு ஏர்போர்ட் மிலிடரி கேண்டீனை சேர்ந்த நபர் ஒருவர், தன்னிடம் உள்ள காரை ரூ. 1.40 லட்சத்திற்கு விற்பனை செய்ய இருப்பதாக ஆன்லைனில் விளம்பரம் செய்தார். அதைப் பார்த்த ஞானசேகரன் அந்த காரை வாங்க முடிவு செய்து, அவரிடம் தொடர்புகொண்டார். அவர் கூறியதன்பேரில், அவரது வங்கி கணக்கிற்கு, முதல் கட்டமாக, அந்த காரை தமிழகத்துக்கு கொண்டு வருவதற்கு, வரியாக ரூ. 37,500 செலுத்தியுள்ளார். தொடர்ந்து, ஜி.எஸ்.டி. வரி ரூ. 27 ஆயிரம் ரூபாய் செலுத்தினார். மேலும், ஜி.பி.எஸ். கட்டணம் ரூ. 32,750 ரூபாய் கட்ட சொன்னைதையும் செலுத்தி உள்ளார்.

இறுதியாக, மீதி தொகை, 50 ஆயிரத்து, 250 ரூபாய் கட்ட வேண்டும் என, ஆன் லைனில் பெங்களூரு நபர் தெரிவித்ததையும், செலுத்திவிட்டு கார் வரும் என்று ஞானசேகரன் காத்திருந்தார். இதற்கிடையில், பணம் செலுத்த தாமதம் செய்ததால், மேலும் ரூ. 99 ஆயிரம் ரூபாய் கட்டினால்தான், கார் எடுத்துவரமுடியும் என பெங்களூர் நபர் தெரிவித்துள்ளார். அந்த தொகையையும், சம்பந்தப்பட்ட நபரின் வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார்.

இந்நிலையில், மீண்டும் ரூ. 1.11 லட்சம் கட்டவேண்டும் என, ஆன் லைன் நபர் தெரிவித்தபோது, அதிர்ச்சியடைந்த ஞானசேகரன், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

இது குறித்து, நாமக்கல் போலீஸ் எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வியிடம், ஞானசேகரன் புகார் அளித்தார். இதையொட்டி எஸ்.பி உத்தரவின்பேரில், மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 15 Aug 2022 4:33 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...