/* */

இளைஞர் காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா

நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில், மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் 76-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

இளைஞர் காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா
X

நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர்கள் காங்கிரஸ் சார்பில், மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

எருமந்பட்டி வட்டாரம் புதுக்கோட்டை பிரிவு ரோடு அருகே நடைபெற்ற மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தியின் 76வது பிறந்த நாள் விழாவுக்கு, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சித்திக் தலைமை வகித்தார். இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் அருளானந்தம், வட்டாரத் தலைவர் தங்கராஜ், மற்றும் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் சதீஷ்குமார் சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி தலைவர் செந்தில்குமார், ராசிபுரம் தொகுதி தலைவர் பெரியசாமி, விக்னேஷ், கணேஷ், குமார், குருசாமி, லோகேஸ்வரன் , மங்கலம் மணி , மோகன், தங்கராஜ், ஸ்வந்த், பாலவிநாயகா , விநாயகம், செந்தில், தனபால் உள்ளிட்ட திரளான காங்கிரசார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ராஜீவ்காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Updated On: 20 Aug 2022 10:00 AM GMT

Related News