/* */

நாமக்கல்லில் வருகிற 16-ம் தேதி ஆட்டோ எக்ஸ்போ துவக்கம்

நாமக்கல்லில் வருகிற 16-ம் தேதி ஆட்டோ எக்ஸ்போ துவங்கப்பட உள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் வருகிற 16-ம் தேதி ஆட்டோ எக்ஸ்போ துவக்கம்
X

நாமக்கல்லில் வரும் 16ம் தேதி வாகன மற்றும் உதிரிபாக கண்காட்சி (ஆட்டோ எக்ஸ்போ) துவங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மளேன செயலாளர் வாங்கலில் கூறியதாவது:-

நாமக்கல், பரமத்தி ரோட்டில் உள்ள ஐஷ்வர்யம் திருமண மண்டபத்தில், வரும் 16, 17, 18 தேதிகளில் வாகன மற்றும் உதிரிபாக கண்காட்சி நடைபெற உள்ளது. இக்கண்காட்சியை நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம், நாமக்கல் மோட்டார் ஸ்பேர் பார்டஸ் டீலர்ஸ் அசோசியேசன், நாமக்கல் ஆல் மோட்டார்ஸ் ஒர்க் ஷாப் ஓனர்ஸ் அசோசியேசன், நாமக்கல் மெக்கானிக்கல் ஒர்க் ஷாப் ஓனர்ஸ் அசோசியேசன், நாமக்கல் ஆட்டோ நகர் அசோசியேசன் ஆகியவை இணைந்து நடத்துகிறது.

கண்காட்சியில் இந்தியாவின் முன்னனி வாகன உற்பத்தி நிறுவனங்கள் உள்பட 250க்கும் மேற்பட்ட உதிரிபாக உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இந்த கண்காட்சியில் தற்போது வாகனத்துறையில் மாறி வரும் தொழில்நுட்பங்களான பிஎஸ் 4, பிஎஸ்6 போன்ற தயாரிப்புகளில் உள்ள மாற்றங்களை இங்குள்ள தொழில் சார்ந்த மக்களுக்கு விளக்க ஒரு கருத்தரங்க வளாகமும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டு தொழிலில் உள்ள மாற்றங்கள் குறித்து விளக்க உள்ளனர் என்றார். ஆட்டோ எக்ஸ்போ செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் அருள், துணைத்தலைவர் கார்த்திகேயன், இணை செலாளர்கள் விஜயகுமார், குமரவேல் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Updated On: 13 Sep 2022 5:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு