/* */

நாமக்கல் நகரில் 157 இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த நடவடிக்கை

நாமக்கல் நகரில் 157 இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக டிஎஸ்பி சுரேஷ் தெரிவித்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் நகரில் 157 இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த நடவடிக்கை
X

நாமக்கர் நகர போலீஸ் டி.எஸ்.பி. பொதுமக்களிடம் குறைகேட்பு முகாம் நடத்தினார்.

நாமக்கல் போலீஸ் உட்கோட்டம் சார்பில், நாமக்கல்லில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. அதில், நாமக்கல், நல்லிபாளையம், மோகனூர், எருமப்பட்டி, சேந்தமங்கலம், புதுச்சத்திரம், வாழவந்திநாடு, செங்கரை மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் என, மொத்தம் 9 போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளுக்கு உட்பட்ட, பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

அதில், எளிதில் தீர்க்கக் கூடிய பணம் கொடுக்கல் வாங்கல், நிலத்தகராறு, வாய்த்தகராறு உள்ளிட்ட சிறிய பிரச்சினைகள் என, மொத்தம் 300க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டன. இது குறித்து, நாமக்கல் டி.எஸ்.பி. சுரேஷ் கூறியதாவது:

நாமக்கல் உட்கோட்ட போலீஸ் ஸ்டேசன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளை தீர்க்க, இதுபோன்ற பொதுமக்கள் குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில், போதை பொருள், குட்கா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையும் முழுமையாக தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்ற சம்பவங்களை குறைக்க, 28 பேர்மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதேபோல தொடர் திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட, 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட 3 பேரில், ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தகாத நடத்தை கொண்ட, 480 பேரிடம் இருந்து போலீசார் மூலம் நன்னடத்தை பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்கள் தீய நடத்தையில் ஈடுபட்டால் ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். நாமக்கல் நகரைப் பொறுத்தவரை, 157 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், வாகனத்தின் பதிவுகளை கண்டறியும் அதிநவீன கேமரா 4 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் வாகனங்களில் தப்பி செல்பவர்களை எளிதாக பிடிக்க முடியும். நாமக்கல்லில் போதை பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டுள்ள, 11 பேரின், ரூ. 2.43 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்து கடைகளில் மது விற்பனை செய்வது தெரிய வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 26 Sep 2022 4:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு