/* */

நாமக்கல்லில் 5.37 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: அமைச்சர் துவக்கம்

நாமக்கல்லில் 5.37 லட்சம் ரேசன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் 5.37 லட்சம் குடும்பங்களுக்கு  பொங்கல் பரிசு தொகுப்பு: அமைச்சர் துவக்கம்
X

நாமக்கல் முல்லை நகரில், ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் 5.37 லட்சம் ரேசன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

நாமக்கல் நகராட்சி, முல்லை நகர் ரேசன் கடையில், ரேசன் கார்டுதாரர்களுக்கு, தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை வகித்தார். ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொங்கல் பரிசுத்தொகுப்புகளை வழங்கிப் பேசினார்.

அப்போது, தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் நாமக்கல் மாவட்டத்தில், 5 லட்சத்து 37 ஆயிரத்து 510 ரேசன் கார்டுதாரர்களுக்கு ரூ.ரூ.28.91 கோடி மதிப்பில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்புகள் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன், குறிப்பிட்ட நாட்களில் ரேசன் கடைகளுக்குச் சென்று பொருட்களைப் பெற்று பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் செந்தில்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வக்குமரன், என்சிஎம்எஸ் துணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேலு, பிஆர்ஓ சீனிவாசன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Jan 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு