/* */

நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை

தமிழக நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று, கொளக்குடி கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கைவிடுத்தனர்.

HIGHLIGHTS

நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை
X

கோப்பு படம் 

விவசாயம், குடிநீர், மின்சாரம், வேலைவாய்ப்பு பெருகும் வகையில், தமிழக நதிநீர் இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என, திருச்சி மாவட்டம் கொளக்குடியைச் சேர்ந்த கிராம மக்கள், நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் மனு அளித்தனர்.

அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், ஆண்டு தோறும், 200 டி.எம்.சி மழைநீர், காவிரி, வைகை, பாலாறு, தென்பெண்ணை வழியாக கடலில் வீணாக கலக்கிறது. சுதந்திரம் பெற்று, 75 ஆண்டுகள் கடந்தும், இந்திய நதிகள் இணைப்பு திட்டம் கனவாகவே உள்ளது. அதனால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறை மாநிலமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்ட வேண்டும்.

முதல்கட்டமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் முதலில் இணைத்து ஏரிகள், குளங்கள், குட்டைகள், நீர் தேக்கங்கள் ஆகியவற்றிற்கு மழைநீர் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு செய்வதால் விவசாயம், குடிநீர், மின்சாரம், வேலைவாய்ப்பு பெருகும். அதன் காரணமாக, தமிழக நதிநீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

அதேபோல், இந்தியாவில், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ஆனால், 2011ல் இருந்து ஜாதிவாரி கணக்கெடுப்பு வீடு, வீடாக நடத்தவில்லை. இந்த கணக்கெடுப்பை நடத்தினால் மட்டுமே, அனைத்து சமூக மக்களுக்கும் இடஒதுக்கீடு சமமாக வழங்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 17 May 2022 12:45 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  5. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  6. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  7. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  8. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  9. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  10. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!