/* */

21 ஆண்டுகள் சாரணிய படையில் பணியாற்றிய ஆசிரியைக்கு விருது

21 ஆண்டுகள் சாரணிய படையில் பணியாற்றிய குமாரபாளையம் ஆசிரியைக்கு விருது வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

21 ஆண்டுகள் சாரணிய படையில் பணியாற்றிய ஆசிரியைக்கு விருது
X

சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், குமாரபாளையம் சாரணிய ஆசிரியை மாலதிக்கு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருது வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாரணிய படையில் பணியாற்றி வருபவர் மாலதி. இவர் பள்ளியில் மாணவியாக படிக்கும் காலம் முதல், ஆசிரியை பணியில் சேர்ந்தது வரை தொடர்ந்து 21 ஆண்டுகள் சாரணிய இயக்கத்திற்கு தன்னை அர்ப்பணித்து உள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த சாரணியர்களுக்கு விருது வழங்கப்படும். இந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், குமாரபாளையம் சாரணிய ஆசிரியை மாலதிக்கு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருது வழங்கினார். பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் நந்தகுமார் உடனிருந்தார்.

இந்த பள்ளியில் உள்ள சாரணிய மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக ஆளுநரிடம் ராஜ்ய புரஸ்கார் விருது பெற்றுள்ளார்கள் என்பதும், இந்த ஆண்டிற்கான நாமக்கல் மாவட்ட அளவிலான சிறந்த பள்ளிக்கான விருது இந்த பள்ளிக்கு கிடைத்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தலைமை ஆசிரியை சிவகாமி, பி.டி.ஏ. நிர்வாகிகள் ஆசிரியை மாலதியை பாராட்டினர்.

Updated On: 31 Jan 2023 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...