ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை

ப வேலூர் தர்காவில் மழை வேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
பரமத்தி வேலூர் தர்காவில் மழைவேண்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் திரளான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
தமிழக முழுவதும் கடுமையான வெயில் காரணமாக பகல் நேர வெப்பநிலை 110 டிகிரியை தாண்டி சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகனங்களில் செல்வோர், தொழிலாளர்கள், விவசாயிகள், முதியோர்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலரும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். பலர் வெப்பம் சம்மந்தமான நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளதால், வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்என கூறப்படுகிறது. கடும் வெப்பத்தில் வாடும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தண்ணீர் பந்தல் அமைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மழை வேண்டி நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஜகன்வழி தர்கா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பள்ளிவாசல் முத்தவல்லி சவான் சாகிப் தலைமை வகித்தார். இந்த சிறப்பு தொழுகையில் பரமத்தி, பாண்டமங்கலம், பாலப்பட்டி மோகனூர் மற்றும் கரூர் மாவட்ட உலமாக்கள் மற்றும் ஜமாத்தார்கள் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து கொண்டனர். மழை வேண்டி சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகளை பரமத்தி வேலூர் ஜகன்வலி தர்கா பள்ளிவாசல் டிரஸ்ட் உறுப்பினர்கள் முபாரக் உல்லா, சலீம், ஹாஜி இப்ராஹிம் ஆகியோர் செய்து இருந்தனர். முடிவில் செயலாளர் இக்பால் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu