/* */

நாகையில் நடந்த சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்த காட்சி வைரல்

நாகையில் நடந்த சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக பரவி வருகிறது.

HIGHLIGHTS

நாகையில் நடந்த சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்த காட்சி வைரல்
X

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்து கிடந்த காட்சி.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகை மேல கோட்டவாசல் பகுதியைச் சேர்ந்தவர் சபரிராஜன் (வயது 55). தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள மேல கோட்டைவாசல் பகுதி பெட்ரோல் நிலையம் அருகே உள்ள சாலையில் நடந்து சென்றார்.அப்போது அதே சாலையில் வந்த மாடு ஒன்று அவரை திடீரென முட்டி தள்ளியது. இதில் அவர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது திருவாரூரில் இருந்து நாகை நோக்கி வந்த அரசு பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் சபரிராஜன் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே சபரிராஜன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் நாகை டவுன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சபரிராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நாகை டவுன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக பரவி வருகிறது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கால்நடைகள் மற்றும் வளர்ப்பு விலங்குகளால் விபத்து மற்றும் உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசும், காவல்துறையினரும் கால்நடைகளின் உரிமையாளர் மற்றும் வளர்ப்பு விலங்குகளின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பை தடுக்க முடியும் என்றும் தெரிவித்தனர். தற்போது இந்த வீடியோ வைரல் வீடியோவாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 20 Nov 2023 8:06 AM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  4. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  6. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  7. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  8. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  9. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?