/* */

நாகையில் மண்பானையில் பொங்கலிட்டு கிராமமே கொண்டாடிய பொங்கல் விழா

நாகையில் பாரம்பரிய முறையில் பொங்கல் மண்பானை வைத்து சூரியனுக்கு பொங்கல் படையல் வைத்தனர். 

HIGHLIGHTS

நாகையில் மண்பானையில் பொங்கலிட்டு கிராமமே கொண்டாடிய பொங்கல் விழா
X

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழா, நாகப்பட்டினம் தெற்கு பால்பண்ணைச்சேரியில் நேற்று நடைபெற்றது. பொங்கல் விழாவை முன்னிட்டு, தெற்கு பால்பண்ணைச்சேரியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீட்டு வாசலில் கரும்புகளை கோபுர வடிவத்தில் நிறுத்தி, பாரம்பரிய முறையில் பொங்கல் மண்பானை வைத்து சூரியனுக்கு பொங்கல் படையல் வைத்தனர்.

பொங்கல் பொங்கியதும் குழந்தைகள் முதல், அனைவரும் உணவு உண்ணும் தட்டுகளை ஒலியெழுப்பி பொங்கலோ பொங்கல் என்று குதூகலத்துடன் குரல் எழுப்பினர். பாரம்பரிய உடை அணிந்து 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் ஒன்று திரண்டு சமூக இடைவெளியை பின்பற்றி உற்சாகமாக பொங்கல் விழாவை கொண்டாடினார். பொங்கிய பொங்கல் பானைகளை அனைத்தும் ஒரே இடத்தில் வைத்து பொங்கல் பானையை சுற்றி கும்மி பாடல்களை பாடி நடனமாடி உற்சாகமாக கொண்டாடினர். படையலிட்ட பின்னர், அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

Updated On: 15 Jan 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது