/* */

தாக்கப்பட்ட நாகை மீனவர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆறுதல்

இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட நாகை மீனவர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆறுதல் கூறினார்.

HIGHLIGHTS

தாக்கப்பட்ட நாகை மீனவர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆறுதல்
X

தாக்கப்பட்ட நாகை மீனவர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆறுதல் கூறினார்.

இலங்கை கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆற்காட்டு துறையை சேர்ந்த மீனவர் சிவக்குமாரை முன்னாள் அமைச்சரும் நாகை அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான ஓ.எஸ்.மணியன் இன்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

செய்தியாளர்களுக்கு பேட்டிஅளித்தார் ஓ.எஸ். மணியன்.

மேலும் சிவகுமாருக்கு அளித்து வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.எஸ். மணியன் இலங்கை கடற் கொள்ளையர்களால் நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர் என்றும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மீனவர்கள் மீதான தாக்குதல் நடைபெறாமல் இருந்ததாகவும், கடந்த ஒரு மாதமாக மீனவர்களின் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் அதிகரித்துள்ளதாக வேதனை தெரிவித்தார்.

மேலும் மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த மாநில அரசு குரல் கொடுக்கவில்லை என குற்றம் சாட்டிய அவர், மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தி மீனவர்களைபாதுகாக்க மத்திய அரசிடம் மாநில அரசு அழுத்தம் தர வேண்டும் என்றார்.

Updated On: 29 Sep 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க