/* */

கிருஷ்ணகிரியில் நாளை கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

கிருஷ்ணகிரியில் நாளை கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என மாவட்ட பொறுப்பாளர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரியில் நாளை கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்
X

மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன்.

கிருஷ்ணகிரியில் நாளை (31ம் தேதி) கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து கிருஷணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏ.வுமான செங்குட்டுவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், கிருஷ்ணகிரி பெங்களூர் சாலையில் உள்ள வெங்கடேஸ்வரா காம்பளக்ஸ் கூட்ட அரங்கில், கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நாளை (31 தேதி) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

எனது தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு, முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமான சுகவனம், மாநில மகளிர் அணி தலைவர் டாக்டர். காஞ்சனா கமலநாதன், மாநில சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணைத் தலைவர் மதியழகன் எம்எல்ஏ., துணை செயலாளர் டேம்.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தருவது. வருகிற 7ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள். உள்ளாட்சி தேர்தல் மற்றும் கழக ஆக்கப்பணிகள் குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.

எனவே, இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி குழு, ஒன்றிய குழு தலைவர்கள், அணிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேருர் கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், திமுக நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு கூட்டத்தை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.

Updated On: 30 July 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க