/* */

தொழிலதிபரை கடத்தி ரூ.3 கோடி பணம் பறிப்பு: ஒருவர் கைது

திருப்பூர் அருகே 3 கோடி ரூபாய் கேட்டு ஆள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தொழிலதிபரை கடத்தி ரூ.3 கோடி பணம் பறிப்பு: ஒருவர் கைது
X

கைது செய்யப்பட பசீர்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த காடையூர் பகுதியை சேர்ந்தவர் சிவபிரதீப். இவர் தந்தை ஈஸ்வரமூர்த்தியுடன் சேர்ந்து அப்பகுதியில் ரைஸ் மில் நடத்தி வருகிறார். நேற்று புதிதாக கட்டி வரும் ரைஸ் மில் கட்டுமான பணிகளை பார்த்துவிட்டு தன் இன்னோவா காரில் சிவபிரதீப் வீட்டிற்கு திரும்பியுள்ளார். காரை அவரது டிரைவர் சதாம் ஓட்டியுள்ளார். அப்போது காரை வழிமறித்த நான்கு பேர் கும்பல் டிரைவரையும், பிரதீப்பையும் தாக்கி காருடன் அவர்களை கடத்தியுள்ளது. அவர்களது காருக்கு பின் டாடா சுமோவில் மூன்று பேர் கும்பல் பின் தொடர்ந்தும் வந்துள்ளனர்.

சிவபிரதீப்பின் தந்தை ஈஸ்வர மூர்த்தியிடம், 3 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கும்பல், பணம் தராவிட்டால் அவரது மகனை கொன்று விடுவோம் எனவும் மிரட்டியதால், அவர்களுக்கு பயந்து 3 கோடி ரூபாயை திண்டுக்கல் பைபாசில் வைத்து இரவு, கொடுத்துள்ளனர். பணத்தை பெற்றுக் கொண்ட கும்பல், சிவ பிரதீப் அவரது டிரைவர் சதாம் ஆகியோரை விட்டுவிட்டு டாடாசுமோ காரில் தப்பியது. இதுகுறித்து சிவபிரதீப் காங்கேயம் போலீசில் புகார் அளித்தார். அதில் தன்னை இன்னோவா காரில் கடத்திய கும்பல் பேசியதை வைத்து, ஜாபர் சாதிக், அகஸ்டின், பாலன், பாலாஜி, சக்திவேல், சையத் அகமதுல்லா மற்றும் ஒருவர் இருந்ததாகவும், கடத்தல் கும்பல் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

அதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட போலீசார் கிருஷ்ணகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கிருஷ்ணகிரி எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி உத்தரவுப்படி, டி.எஸ்.பி., சரவணன் தலைமையில் கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். இன்று காலை கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை அருகில் டாடா சுமோ காரில் நின்றிருந்தவரை பிடித்து விசாரித்ததில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் குருவிநாயனப்பள்ளி பகுதியை சேர்ந்த பசீர், என்பதும், கடத்தல் கும்பலை வழிநடத்தியது கிருஷ்ணகிரி பழையபேட்டை முகமது கவுஸ் சாகிப் பாய் தெருவை சேர்ந்த சையத் அகமதுல்லா என்பதும் தெரிந்தது. பசீரை கைது செய்து, அவரிடமிருந்து, 20 லட்சத்து 44 ஆயிரம் ரொக்கம், டாடாசுமோ கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார் திருப்பூர் மாவட்ட போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல திருப்பூர் மாவட்ட போலீசார் எட்டு தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில் மதுரையில் பதுங்கியிருந்த சக்திவேல், அகஸ்டின் மற்றும் பாலாஜி ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து, 1 கோடியே 69 லட்சத்து 50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட மேலும் மூன்று பேரை தேடி வருகின்றனர்.

Updated On: 23 Aug 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க