/* */

உக்ரைன் தத்தளிக்கும் பிள்ளைகளை மீட்க கலெக்டரிடம் பெற்றோர்கள் மனு

உக்ரைனில் மருத்துவர், பொறியாளர் படிக்கும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களை மீட்டு தரக்கோரி பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

உக்ரைன் தத்தளிக்கும்  பிள்ளைகளை மீட்க  கலெக்டரிடம் பெற்றோர்கள் மனு
X

உக்ரைனில் சிக்கி தவிக்கும் கரூர் மாணவிகள்.

கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பொறியியல், மருத்துவம் படிக்க உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளனர். தற்போது அங்கு ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் போர் மூண்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த திம்மாச்சிபுரத்தை சேர்ந்த சின்னதுரை மகன் சூர்யா, 3ம் ஆண்டு ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் கல்வி பயின்று வருகிறார். இதேபோல் காந்தி கிராமத்தை சேர்ந்த தங்கவேல் மகன் தரன் 3ம் ஆண்டு மருத்துவக் கல்வி பயின்று வருகிறார். பசுபதிபாளையம் அருணாச்சல நகரை சார்ந்த ஆண்டனி கேப்ரியேல் மகள் ஸ்ரீநிதி, மருத்துவக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருவதாகவும் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீட்டு தரக் கோரி மனு அளித்தனர். தற்போது போர் நடந்து வரும் நிலையில் ஏ.டி.எம் பணம் எடுக்க முடியவில்லை என்றும், உணவுப் பொருட்கள் கிடைக்காமல் சிரமப்படுவதாகவும், 2 நாட்களாக மெட்ரோ சுரங்க பாதைகளிலும், கல்லூரி விடுதிகளிலும் தங்கி இருப்பதாகவும் அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 26 Feb 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  7. இந்தியா
    தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா...
  8. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை
  9. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  10. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...