/* */

கரூரில் போக்குவரத்து காவலர் போல உடையணிந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கரூரில் போக்குவரத்து போலீசார் போல உடையணிந்து பாதுகாப்பான சாலை பயணம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

HIGHLIGHTS

கரூரில் போக்குவரத்து காவலர் போல உடையணிந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

கரூரில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி காவலர்கள் உடையணிந்து  இளைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கரூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறை மற்றும் சமூக உரிமைகள் பாதுகாப்புக் கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே நடைபெற்றது.

கரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போக்குவரத்து காவலர்கள் போல உடையணிந்த இளைஞர்கள் நடனமாடி வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம், சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும், அதிவேகமாக வாகனம் இயக்குதல் மற்றும் மது அருந்தி வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் முகப்பு விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

Updated On: 29 Sep 2021 1:04 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!