/* */

காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை

கரூரில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தரைக்கடை காய்கறி வியாபாரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

HIGHLIGHTS

காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை
X

கொரோனா தொற்று 2 வது அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தடுக்க கரூர் நகராட்சி பகுதியில் காமராஜர் மார்க்கெட், உழவர் சந்தை ஆகிய சந்தைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடாக கரூர் பேருந்து நிலைய வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொற்று பரவுதல் அதிகரித்து வரும் நிலையில் பேருந்து நிலைய வளாகத்தில் தரைக் கடைகள் அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வியாபாரிகளுக்கு கரூர் நகராட்சி கஸ்தூரிபாய் தாய் சேய் நல மையத்தின் மருத்துவ பணியாளர்கள் சார்பில் இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

இதில், 110 தரைக்கடை வியாபாரிகள், அவர்களது தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தரைக்கடை வியாபாரிகள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் இந்த பரசோதனை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

Updated On: 20 May 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  2. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  3. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  4. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  5. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  6. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  7. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  8. வீடியோ
    அதிக மதிப்பெண்கள் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள விழுப்புரம்...
  9. கலசப்பாக்கம்
    மக்கள் கூடும் இடத்தில் பசுமை நிழல் பந்தல் அமைப்பு
  10. வந்தவாசி
    தவளகிரி வெண்குன்றம் மலையில் தீ விபத்து