/* */

கரூர் நகராட்சியில் சிறப்பு தூய்மை பணி துவக்கம்

கரூர் நகராட்சி பகுதியில் 48 வார்டுகளிலும் 800 பணியாளர்களை கொண்டு சிறப்பு தூய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது

HIGHLIGHTS

கரூர் நகாராட்சி பகுதியில் சிறப்பு தூய்மை பணியினை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். 150 ஆண்டுகால கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அண்மையில் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனையடுத்து கரூர் நகராட்சியில் உள்ள 48 வார்டு பகுதியையும் தூய்மையாக வைத்துக் கொள்ளும் வகையிலும் பிளாஸ்டிக் பயன்பாடுகள், தினசரி குப்பைகளை அகற்றிட சிறப்பு கவனம் எடுத்து இந்த பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதன்படி, நகராட்சி பகுதிக்குட்பட்ட திருக்காம்புலியூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி, ஆட்சியர் பிரபு சங்கர் ஆகியோர் சிறப்பு தூய்மை பணியினை தொடங்கி வைத்தனர்.

கரூர் நகராட்சியில் உள்ள 48 வார்டுகளிலும் 800க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களைக் கொண்டு சிறப்பு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து நகராட்சி முழுவதும் இந்த சிறப்பு தூய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது.

Updated On: 8 Oct 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  2. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  3. ஈரோடு
    பெருந்துறையில் எடப்பாடி பழனிசாமியின் 70 வது பிறந்தநாளையொட்டி
  4. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  5. தேனி
    வீரபாண்டி கோவில் திருவிழாவில் ஒரே நேரத்தில் 61 அக்னிசட்டி எடுத்த...
  6. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  7. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  8. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  9. கல்வி
    ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம்...
  10. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?