எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்தநாள்: பெருந்துறையில் சர்க்கரைப் பொங்கல் வழங்கல்

பெருந்துறையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாள் விழாவில் பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் சர்க்கரைப் பொங்கல் வழங்கினார்.
பெருந்துறையில் எடப்பாடி பழனிசாமியின் 70வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல், பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டது.
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் 70வது பிறந்த நாளையொட்டி ஈரோடு மாவட்டம் பெருந்துறை கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் பெருந்துறை சோழீஸ்வரர் கோவிலில் அபிஷேக பூஜைகளும் சிறப்பு அர்ச்சனையும் நடைபெற்றது. பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளருமான கே.சி.கருப்பணன் கலந்து கலந்து கொண்டு பெருந்துறை பேருந்து நிலையம் அருகில் உள்ள நீர்மோர் பந்தலில் பொது மக்களுக்கு சர்க்கரைப் பொங்கல், தக்காளி சாதம், அபிஷேக பஞ்சாமிர்தம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பெருந்துறை முன்னாள் எம்எல்ஏ கேசி பொன்னுத்துறை, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் அப்புகுட்டி (எ) வெங்கடாசலம், துணை செயலாளர் அன்பரசு, மாவட்ட இலக்கிய அணி இணை செயாலளர் சந்திரன், திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் அருணாசலம், கிழக்கு மாவட்ட பொருளாளர் கே.பி.எஸ்.மணி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் திங்களூர் கந்தசாமி, மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் திருமூர்த்தி, மாவட்ட மாணவரணி துணை செயலாளர் பிரபு, கள்ளிபாளையம் தேவராஜ், ஒன்றிய கவுன்சிலர் ரொட்டி பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், மாவட்ட மகளிர் அணி செயலாளர் உமா நல்லசாமி, கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் வி.எம். பாலசுப்பிரமணி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் ஏ.கே. சாமிநாதன், ஒன்றிய மகளிரணி செயலாளர் நீலவேணி, பேரூர் செயலாளர் கல்யாணசுந்தரம், நகர மகளிர் அணி செயலாளர் மோகனாம்பாள், முன்னாள் மாவட்ட அவை தலைவர் ஜெகதீஷ், அம்மா பேரவை ஒன்றிய அவைத் தலைவர் டைலர் ரவி, ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளர் பெட்டிசன் மணி, கருமாண்டி செல்லிபாளையம் பேரூர் கழக எம்ஜிஆர் மன்ற செயலாளர் கோவிந்து மற்றும் பெருந்துறை கிழக்கு ஒன்றிய அண்ணா திமுக அனைத்து சார்பணி நிர்வாகிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu