அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
![அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை](https://www.nativenews.in/h-upload/2024/05/12/1902569-potta.webp)
ஆவணப்பதிவு தொடர்பாக தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அனைத்து மாவட்ட பதிவாளர்கள் மற்றும் சார்பதிவாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆவணதாரர்கள் தாக்கல் செய்யும் ஆவணங்களில் காணப்படும் சிறு பிழைகளுக்காக பொதுமக்களை அலைக்கழிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அதேபோல மக்கள் தாக்கல் செய்யும் ஆவணங்கள் தொடர்பாக பதிவு அலுவலர்களுக்கு இடையே நடைபெறும் கடிதப் போக்குவரத்து குறித்தும் தகவல் தெரிவிப்பதில்லை.
இதற்கு சான்றாக வங்கி ஒன்றால் எழுதப்பட்ட விற்பனை ஆவணத்துடன் ஒரு சார்பதிவாளர் இதற்கான ஆவணம் தனது அலுவலக வரம்பிற்கு வராது என்று வேறொரு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அந்த ஆவணத்தை அனுப்பி வைத்துவிட்டார். ஆனால் இந்த தகவலை சம்பந்தப்பட்ட வங்கி ஆவணதாரர்கள் என யாரிடமும் சொல்லவில்லை. இந்த பிரச்சனை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.எனவே இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்கக்கூடாது.
ஆதலால் சார்பதிவாளர்கள் பதிவுக்கு தாக்கல் செய்யும் ஆவணங்கள் குறித்த நிலையினை ஆவணதாரர்களுக்கு உரிய முறையில் தெரிவிக்க வேண்டும் அதேபோல பத்திரங்களில் சிறு பிழைகளுக்காக பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu