4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்

4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி மற்றும் ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது.

ஆந்திர சட்டசபை தேர்தல் உள்பட 96 நாடாளுமன்ற தொகுதிகளில் நான்காவது கட்ட தேர்தலில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

நாடாளுமன்றத்துக்கு நான்காவது கட்டமாக 96 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி நடைபெற்று வந்த அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்வடைந்தது. இந்த தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டசபைக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற இருக்கிறது.

543 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய நாடாளுமன்றத்திற்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 102 நாடாளுமன்ற தொகுதிகளில் கடந்த மாதம் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 66 .14 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இரண்டாம் கட்டமாக கடந்த மாதம் 26 ஆம் தேதி 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 66.71 சதவீத வாக்குகள் பதிவாகின.

மூன்றாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த ஏழாம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 65 68% வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மூன்றாம் கட்ட தேர்தலும் அமைதியாக முடிந்த நிலையில் நான்காவது கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை திங்கட்கிழமை நடைபெற உள்ளது.

நான்காம் கட்ட தேர்தல் ஆந்திரா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், மராட்டியம், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் ,பீகார்,ஜார்கண்ட், ஒடிசா ஆகிய 9 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 96 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இதில் சுமார் 1 700 க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

இவர்களில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணோக்கி தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ,மேற்கு வங்காள மாநிலம் பஹரம்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான், கிருஷ்ணா நகரில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் முகுவா மைத்ரா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்.

இதேபோல தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் போட்டியிடும் அனைத்திந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதின் ஒவைசி, ஆந்திர மாநிலம் கடப்பா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஒய் எஸ் ஷர்மிளா முக்கியமானவர்கள். இந்த 96 தொகுதிகளிலும் அனல் பறந்த பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.

நான்காம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரத்தில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பாரதிய ஜனதா, காங்கிரஸ் இடையே தெரிவிக்கப்பட்ட கருத்துகளில் அனல் பறந்தது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவு தலைவராக இருந்த சாம்ரிட்டோ தென் இந்திய மக்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சை ஆகின.

நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, புலி வந்தால் தொகுதியிலும், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குப்பம் தொகுதியிலும், ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாண் பித்தாபுரம் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். இதே போல் ஒடிசா மாநில சட்டசபைக்கும் முதல் கட்டமாக 28 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.அங்கு மொத்தம் 147 தொகுதிகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story