/* */

கொரோனா 3 ம் அலை ஊராட்சி குழுக்கள் மூலம் தடுக்க நடவடிக்கை: கரூர் எம்பி ஜோதிமணி

கொரோனா மூன்றாம் அலை பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கரூர் எம்பி ஜோதிமணி கூறினார்.

HIGHLIGHTS

கொரோனா 3 ம் அலை ஊராட்சி குழுக்கள் மூலம் தடுக்க நடவடிக்கை: கரூர் எம்பி ஜோதிமணி
X

 கரூரில் இன்று நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் எம்பி. ஜோதிமணி பேசும் போது. 

கரூர் மாவட்டத்தில் ஊராட்சி அளவில் குழுக்களை அமைத்து கொரோனா தொற்றின் மூன்றாம் அலை பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது கரூர் எம்பி ஜோதிமணி கூறினார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கண்காணிப்பு குழு தலைவர் எம்பி ஜோதிமணி கலந்து கொண்டு அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்டத்தில் கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள், மேலும் புதிய திட்டங்கள் குறித்த ஆய்வு நடைபெற்றது.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் கழிவறை வசதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது .

மாவட்டம் முழுவதுமே குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது இதை நீக்க மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் வாக்குறுதி அளித்துள்ளபடி, கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி, க. பரமத்தி, தான்தோன்றிமலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் தனித்தனி கூட்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது இதற்காக 450 கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

ஊரடங்கு காலத்தில் இந்தியா முழுவதுமே குழந்தை திருமணம் அதிகரித்துள்ளது கரூர் மாவட்டத்தில் இதுபோன்ற குழந்தைத் திருமணத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் பெரும்பாலும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருப்பதால் அவர்கள் மீதான பல்வேறு வன்கொடுமை மற்றும் பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம்.

பஞ்சாயத்து அளவில் குழுக்களை அமைத்து கொரோனா தொற்றின் மூன்றாம் அலையை தடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கரூர் மாவட்ட ஆட்சியர் ஒரு மருத்துவராக இருப்பதால் கொரோனா தொற்றின் 3ம் அலையை தடுப்பது சுலபம். மூன்றாம் தொற்றால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக அதை முன்னெச்சரிக்கையாக தடுப்பது குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்றில் சிகிச்சை அளிப்பதற்கான சிகிச்சையை பொறுத்தவரை கரூர் மாவட்டத்தில் பிரச்சினையில்லை மாவட்ட அமைச்சரும் மாவட்டம் முழுவதும் அதிக அளவிலான படுக்கை வசதி கொண்ட சிகிச்சை மையங்களை ஏற்படுத்தி உள்ளார் எம்பி நிதி உதவியின் மூலம் ஆக்சிஜன் செறிவூட்டிகளும் வழங்கப்பட்டுள்ளன என எம்.பி் கூறினார்.

Updated On: 13 July 2021 1:53 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  2. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  3. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  6. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  8. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  9. சேலம்
    மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...