/* */

தோவாளை பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை

தோவாளை பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை

HIGHLIGHTS

தோவாளை பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை
X

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் புகழ்பெற்ற பூ சந்தை உள்ளது. இந்தச் சந்தைக்கு ஆரல்வாய்மொழி, ராதாபுரம், குமாரபுரம்,ஆவரைகுளம், பழவூர் ஆகிய ஊரிலிருந்து பிச்சிப் பூ, சங்கரன்கோவில், கோவில்பட்டி, மதுரை, மானாமதுரை, கொடைரோடு, திண்டுக்கல்,ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகை பூவும், பெங்களூர், ஓசூர், ராயக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து மஞ்சள் கிரேந்தி, பட்டர்ரோஸ், நெல்லை மாவட்டம் திருக்கண்ணங்குடி, அம்பாச முத்திரம், புளியங்குடி, புளியரை ஆகிய ஊரிலிருந்து பச்சை துளசியும், தோவாளை மற்றும்அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சம்பங்கி, அரளி, கோழிக்கொண்டை, சேலத்தில் இருந்து அரளிப்பூவும் கொண்டு வரப்படுகின்றன.

தற்போது கடுமையான பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் சந்தைக்கு பூக்கள் வரத்துகுறைந்துள்ளது. ஆனால் தேவை அதிகமாக உள்ளது. இதனால் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. மல்லிகை பூ கிலோ ரூ. 2ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.600-க்கும், அரளி, ரோஸ் ரூ.150-க்கும், கிரேந்தி ரூ.80-க்கும், மஞ்சள் கிரோந்தி ரூ.85-க்கும்விற்கப்பட்டது. மற்ற பூக்களும் விலை உயர்ந்து காணப்படு கிறது. இதே பனிப்பொழிவு நீடிக்கும் என்றால் பூக்கள் விலை இதை விட அதிகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Updated On: 22 Nov 2023 5:22 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...