/* */

கல்குவாரி தொழிலாளர்களுக்கு நல வாரிய பதிவு , காப்பீடு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமையில் கல்குவாரி குத்தகைதாரர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கல்குவாரி தொழிலாளர்களுக்கு நல வாரிய பதிவு , காப்பீடு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி
X

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கல்குவாரி குத்தகைதாரர்களுடன் கலெக்டர் ஆர்த்தி ஆலோசனை மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி தலைமையில் கல்குவாரி குத்தகைதாரர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா. ஆர்த்தி தெரிவித்ததவது :

குவாரிக் குத்தகைதாரர்கள் குவாரிப்பணியின் போது அரசு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தும் முறையாக பின்பற்ற வேண்டும். மேலும் பாதுகாப்பான முறையில் குவாரிப்பணி மேற்கோள்ள வேண்டும்.

கல்குவாரியில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு மற்றும் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும்.

குறிப்பாக குவாரிகளில் வெடிப்பொருட்கள் உபயோகிக்கும் முன் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கால்நடைகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பினை உறுதி செய்தபின் குவாரியில் வெடிப் பொருட்களை பயன்படுத்தவேண்டும்.

குவாரி மற்றும் கிரஷர்களிலிருந்து கனிமங்களை கொண்டு செல்லும்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் கிராம சாலைகளில் நீர் தெளித்து புழுதி பறக்கவண்ணம் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்து செல்லும் வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவீட்டில் வாகனத்தின் கொள்ளளவு உயரத்திற்கு மட்டுமே கனிமங்களை கொண்டு செல்லவும், வாகனத்தின் மேல்கூரையை தார்பாய் மூடியவாறு கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு ஆட்சியர் ஆர்த்தி அறிவுரை வழங்கினார் .

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. பன்னீர்செல்வம், காஞ்சிபுரம் வருவாய் கோட்ட அலுவலர் .பெ.இராஜலட்சுமி, திருப்பெரும்புதூர் வருவாய் கோட்ட அலுவலர் .முத்துமாதவன், உதவி இயக்குநர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை விஜயராகவன், உதவி புவியியலாளர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை சுரேஷ்குமார் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட குவாரிக் குத்தகைதாரர்கள் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Updated On: 6 July 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  2. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  7. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  8. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  9. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...