/* */

பள்ளியில் மாணவர்களுக்கு வரையப்பட்ட ஓவியங்கள் பாழானது

வாக்குப்பதிவு போஸ்டர்களால் மாணவர்கள் அறிந்து கொள்ள வரையப்பட்ட கற்றல் ஓவியங்கள் அனைத்தும் வீணானது. -பெற்றோர்கள் குற்றச்சாட்டு

HIGHLIGHTS

பள்ளியில் மாணவர்களுக்கு வரையப்பட்ட ஓவியங்கள் பாழானது
X

காஞ்சிபுரம் அடுத்த திருட்புக்குழி பகுதியில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய நடுப் பள்ளி. தனியார் பள்ளிகளையெல்லாம் மிஞ்சும் அளவில் இப்பள்ளி மிகவும் சிறப்பாக மாணவர்களின் கல்வித் திறன் மற்றும் பொதுஅறிவு மேம்பட பல்வேறு வகையில் சிறப்பாக செயல்பட்டு வந்தது. பள்ளி வளாகம் முழுவதும் ஆங்கில எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தது மேலும் பொது அறிவு சம்பந்தமான சுவர் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.


இந்நிலையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்காக இப்பள்ளியில் 8 வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டது. இதன்காரணமாக பள்ளி வளாகங்களில் பெரும்பாலான பகுதிகளில் தேர்தல் தொடர்பான அறிவிப்பு நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டன. கிராமப்புற மாணவர்களுக்கு சிறப்பான கல்வி வேண்டும் என ஊர் பொதுமக்கள் மற்றும் சில தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து இப்பள்ளியை மேம்படுத்தினர்.

தேர்தல் காரணமாக அப்பள்ளி முழுவதும் ஒட்டப்பட்ட அறிவிப்பு போஸ்டர்களால் சீர்குலைந்து போயுள்ளது . தற்பொழுது மீண்டும் இப்பள்ளியை மேம்படுத்த கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 12 April 2021 11:29 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  4. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  7. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  8. லைஃப்ஸ்டைல்
    கஸ்தூரி மஞ்சளின் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    கொடூர வலி தரும் சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
  10. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...