/* */

தமிழ் தெரியாமல் துணை ஆணையரும் , இந்தி தெரியாமல் கேள்வி கேட்டவரும் என நடந்த ஆய்வு கூட்டம்

காஞ்சிபுரத்தில் பட்டியலின துணைத் தலைவர் தலைமையிலான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டபயனாளிகள் மொழி பிரச்சனையால் திண்டாடினர்.

HIGHLIGHTS

தமிழ் தெரியாமல் துணை ஆணையரும் , இந்தி தெரியாமல் கேள்வி கேட்டவரும் என நடந்த  ஆய்வு கூட்டம்
X
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் தேசிய பட்டியலின ஆணையத்தின் துணை தலைவர் .அருண் ஹல்தார் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் துறை சார்பாக பட்டியலின மக்களுக்கு மேற்கொள்ளப்படும் நலத்திட்டங்கள் பயனாளிகள் குறித்த விவரங்களை தெரிவித்தார்.

அதன்பின் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, ஊரக வளர்ச்சி சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து நிறைவடைந்த பணிகள் குறித்தும் விளக்க உரை அளித்தார்.

அதன்பின் பேசிய பயணாளி செல்வராஜ் , கடந்த 10 ஆண்டுகளாக எஸ்சி எஸ்டி ஆகியோரின் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், வங்கிகளில் கல்விக்கடன் மற்றும் சுயதொழில் கடன் பெறுவதில் தங்களுக்கு பெருத்த சிரமம் ஏற்படுவதாக தெரிவித்தனர்.

மேற்கண்ட கோரிக்கையை தமிழில் தெரிவிக்க அது குறித்து தேசிய ஆணையத் துணைத் தலைவருக்கு இந்தியில் மொழி பெயர்ப்பாளரால் தெரிவிக்கபட்டபோது அவர் இந்தியில் இது குறித்து மனு அளிக்க தெரிவித்ததோடு தனது உதவியாளரை தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும் தெரிவித்தார்.

புகார் தெரிவிப்பவர்கள் தமிழில் பேசியது துணை ஆணையருக்கும் , இந்தியில் பதில் அளித்தது புகார் தெரிவித்தவருக்கும் மொழி பிரச்சினையால் பல குழப்பங்கள் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் ஆணையர் தொடர்ந்து ஐந்து நிமிடம் இந்தியில் பேசியது கூட்டத்தில் கலந்து கொண்ட பயனாளிகள் ஒருவருக்கும் மட்டுமில்லாமல் , அதிகாரிகள் , செய்தி சேகரிக்க வந்த செய்தியாளருக்கும் மொழி அறியாமல் அனைவருக்கும் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இதுபோன்ற கூட்டங்களில் முன்கூட்டியே பயணாளிகளின் குறைகளை கேட்டு அறிந்து அதற்கான உரிய விளக்கத்தை மொழி பிரச்சினை இல்லாமல் மாவட்ட ஆட்சியர் வழங்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 1 Nov 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  2. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  5. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  6. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  7. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  9. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?