/* */

கொலை வழக்காக மாறிய சாலை விபத்து நிகழ்வு

எதிர்பாராத விதமாக சைகை இல்லாமல் கார் திரும்பியதால் இருசக்கர வாகனம் , கார் மீது மோதியதில் இருதரப்பிற்கும் கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கொலை வழக்காக மாறிய சாலை விபத்து நிகழ்வு
X

விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் பாங்கிரஸ்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே கார் ஓட்டுனருக்கும் பைக்கில் வந்தவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பைக்கில் வந்த இளைஞர்களை காரை கொண்டு தட்டி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி. மேலும் ஒருவர் படுகாயங்களுடன் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் காரை ஓட்டுனரை கைது செய்துள்ள நிலையில் கொலை வழக்குபதிவு செய்ய கோரி உறவினர்கள் காவல்நிலையம் முற்றுகையிட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மொளச்சூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் விஷ்ணு (24), ஏழுமலை (30). விஷ்ணு அதே பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுங்குவார்சத்திரம் பஜாருக்கு கோழி இறைச்சி வாங்க பைக்கில் இருவரும் சென்றுள்ளார். அப்போது விஷ்ணு ஓட்டி சென்ற பைக்குக்கு முன்பாக சென்ற கார் ஒன்று இன்டிகேட்டர் எதுவும் போடாமல் திடீரென வளைவில் திரும்பி உள்ளது.இதனால் கட்டுப்பாட்டை இழந்த விஷ்ணு கார் மீது மோதினார்.

இதன் காரணமாக விஷ்ணுவுக்கும், காரை ஓட்டி வந்த திருவள்ளூர் மாவட்டம் பண்ணூரை சேர்த்த பாங்கிராஸ் (62) ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் சிலர் விஷ்ணுவையும் காரை ஓட்டி வந்த பாங்கிராஸையும் சமாதானம் செய்து அனுப்பினர்.பின்னர் அங்கிருந்து விஷ்ணு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். சிறிது தூரம் சென்ற நிலையில் பாங்கிராஸ் காரை அதிவேகத்தில் ஓட்டிச் சென்று விஷ்ணு சென்ற பைக்கின் பக்கவாட்டு பகுதியில் இடித்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்றார்.

இந்த விபத்தில் விஷ்ணு தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிர் இழந்தார். உடன் வந்த ஏழுமலை படுகாயம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்த மக்கள் சிலர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து படுகாயமடைந்த ஏழுமலையை மீட்டு சிகிச்சைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஏழுமலைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்து வந்த விஷ்ணுவின் மனைவி உறவினர்கள் கார் ஓட்டுனர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.

இதையடுத்து காவல்துறையினர் காரை இயக்கி சென்று விபத்தை ஏற்படுத்தி கொலை செய்த பாங்கிராஸை கைது செய்ததோடு காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இளைஞர்களிடம் வாக்குவாதம் செய்து இருசக்கர வாகனத்தை அணைத்துக் கொண்டே சென்று காரின் பக்கவாட்டு பகுதியில் முட்டி தள்ளி இளைஞர்கள் இருவரும் தூக்கி வீசப்படும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 10 July 2023 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...
  7. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  8. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்
  9. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  10. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்